சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரத்தின் தூதுவர் திரு. அம்சா அவர்களைக் காணவரும் தமிழகத்தின் சக்திமிக்க நண்பர்களுக்கு? பணபலம் வாய்ந்த நபர்களுக்கும்?, ஊடகவியலாளர்களுக்கும்? இலங்கை வெளிவிவகாரதுறை அமைச்சகத்தின் டிசம்பர் 2007யில் வெளியீடான “தமிழகத்தின் பார்வையில் எல்.டி.டி.இ”, (LTTE in the Eyes of Tamil Nadu) எனும் ஆங்கில புத்தகத்தையும் "பிற" பரிசு பொருள்களுடன்! பரிசளித்து வருகிறார். இலவசம் என்றால் வாயை பிளந்து கொண்டு நஞ்சையும் பெற்றுப் பழக்கப்பட்ட சில தமிழ் நண்பர்களுக்கு இப்பரிசு பெரும் பரிசாய் தெரியும்.புத்தகம் 11.5” x 8.5” அளவில் “தனி சுற்றுக்காக மட்டும்” என குறிக்கப்பட்டு, பிரஸ் பிரின்ட் எனும் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. புத்தகம் அட்டையுடன் சேர்த்து 220 பக்கம் கொண்டுள்ளது. பக்கங்கள் மிக தரமான வார்னிசு காகிதத்தால் அத்தனை பக்கங்களும் பல வர்ணமாய் அச்சிடப்பட்டுள்ளது.
புத்தகம் மூன்று பிரிவாய், தலையங்கம், செய்திகள் - ஆங்கிலம், செய்திகள் - தமிழ் என பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று பிரிவுகளும் தமிழகத்தில் 2007-ல் அச்சிடப்பட்டு வெளியான ஊடகங்களில் “தேவையான” பகுதிகள் மட்டும் படங்களுடன் மறுபதிவு செய்து கையாளப்பட்டுள்ளது.
பின்புற கடைசி அட்டையின் உட்பகுதியில் “அக்நாலேஞ்மென்ட்”, என குறிப்பிட்டு அப்புத்தகத்தின் கட்டுரைகளுக்கு துணையாய் இருந்த ஊடகங்களின் பெயர்கள் (The Hindu, The New Indian Express, Deccan Chronicle, News Today, Frontline, Dinakaran, Dinamani, Dinamalar, Daily Thanthi, Makkal Kural, Maalai Malar, Maali Sudar) குறிக்கப்பட்டுள்ளன.
ஓரே ஒரு பக்கம் “அறிமுகம்” எனப்போட்டு எல்.டி.டி.இ-யை வசைமாறி சொற்களால் பொழிந்து தள்ளியுள்ளனர்.
எல்.டி.டி.இ-யை பற்றி வதந்திகள், இலங்கை அரசின் தகவல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய அதே ஊடகங்களில் வந்த இலங்கை அரசிற்கு விரோமான செய்திகள் முழுக்க முழுக்க மறைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தலே, படித்தாலே இப்புத்தகம் ஒருதலை பட்சமாய் அச்சேரியுள்ளது வெளிப்படுகிறது. என்னதான் இலங்கை அரசு முழு பூசினிக்காயை சோற்றில் போட்டு மறைத்தாலும், வெகு விரைவில் உண்மை செய்தி வெளிவந்து விடத்தான் போகிறது.
No comments:
Post a Comment