20.3.08

'Sri Lankan Embassy in Chennai is spying in Tamil Nadu?' - [Kumutham Reporter - 23.03.2008]


வடக்கு _ கிழக்கு இலங்கையில் மட்டும் வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்’ (LTTE in the eyes of Tamil Nadu). இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில், தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட்டும் பொறுப்பாகத் தேடித் திரட்டி அந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக¢கிறது.
‘மனிதம்’ என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் செயல் இயக்குனர் ‘அக்னி’ சுப்ரமணியம் என்பவரின் கையில் இந்தப் புத்தகம் சிக்க, அதை அவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். தமிழர் பாதுகாப்புப் பேரவைக¢ கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘‘தமிழீழத்துக்கு எதிரான இந்தப் புத்தகத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகம் மூலம் தமிழகத்தில் விஷத்தைப் பரப்பி வரும் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தடை செய்ய வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

No comments: