22.6.08

WTM - These provisions do not, in our view, accord with the principles of fundamental

பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட விதிகள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய உரிமைமுறிவுக் கோட்பாடுகளுக்கு ஒத்துப் போகவில்லை!

(கடந்த வியாழக்கிழமை (யூன் 19) அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் உ.த. இயக்கம் அமர்த்தியுள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான ஆயசலள னுயஎனைந படித்த அறிக்கையின் தமிழாக்கத்தையும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கொடுதத பதிலும் கீழே கொடுக்கப பட்டுள்ளது.)

உ.த. இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியல் இட்டதை எதிர்த்து நிச்சயமாக நாங்கள் வழக்குத் தொடர இருக்கிறோம். அதன் முதற்படியாக குறிப்பிட்ட விதியை நிறுத்தி க்குமாறு கேட்டு மைய அரசின் நடுவர் மன்றத்தில் விண்ணப்பம் செய்வோம். அதன் பின்னர் அமைச்சருக்கு விண்ணப்பம் செய்வோம்.

அமைச்சர் தனது பரிந்துரையை மீள்கவனிப்புச் செய்ய நாட்டம் காட்டமாட்டார் என வைத்துக்கொண்டால் நாங்கள் உ.த.இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிட்ட அமைச்சரின் முடிவை சட்ட மீளாய்வு செய்யுமாறு மைய அரச நடுவர் மன்றத்துக்கு விண்ணப்பம் செய்வோம்.

அது மட்டுமல்லாது பயங்கரவாதப் பட்டியலில் பயங்கரவாத அமைப்புக்கள் எனப் பட்டியல் இடப்படும் விதிகள் அரசமைப்பு சட்டத்துக்கு உடன்பாடானதா என்பது பற்றியும் வழககாட உத்தேசித்துள்ளோம். ஒரு அமைப்பை பட்டியலில் சேர்க்கும் முறைமை பற்றிப் பல விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முதலில் விசாரணை மூடிய கதவுக்குப் பின்னால் நடைபெறும். இலக்கு வைக்கப்பட்டுள்ள அமைப்புக்கு அறிவித்தல் கொடுக்கப் படுவதில்லை. அமைச்சர் எந்தச் சான்றுகளின் அடிப்படையில் - அவற்றின் உண்மை பொய் பற்றி; சோதித்துப் பார்த்தாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும் - தனது பரிந்துரைகளை வழங்கினார் என்பது தெரிவிக்கப்படுவதில்லை. இரண்டாவது, சட்ட மீளாய்வு விதிகள் அமைச்சரின் தகவலை நடுவர் இரகசியமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கிறது. மேலும் அந்தத் தகவலை வெளியிடுவது தேசிய பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் என அமைச்சரின் வழக்கறிஞர் கருதினால் பட்டியல் இடப்பட்ட அமைப்பு இல்லாமலே சாட்சியத்தை நடுவர் கேட்கமுடியும். அமைப்பைப் பொறுத்தளவில் அது தனக்கு எதிரான தகவலின் சுருக்க
அறிக்கையை பெறமட்டும் உரித்துடையது. இந்தச் சுருக்க அறிக்கை நடுவருக்கும் கொடுக்கப்படும். இதன் மூலம் அமைச்சர் எடுத்த முடிவுக்கான காரணங்கள் “நியாயமான முறையில் தெரிவிக்கப்படும்” விசாரணைக்கு “நியாயமான வாய்ப்பு” வழங்கப்படும்.

எந்தவொரு ஆவண சான்றையும் பார்க்கும் உரிமையோ சாட்சி சொல்லவரும் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையோ அந்த அமைப்புக்கு இல்லை.
எங்களது பார்வையில் இந்த விதிகள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய உரிமைமுறிவுக் கோட்பாடுகளுக்கு (Pசinஉipடநள ழக ஊhயசவநச ழக சுiபாவள யனெ குசநநனழஅள) ஒத்துப் போகவில்லை.
இப்படிப் பட்டியலில் உ.த. அமைப்பு பட்டியல் இடப்பட்டது அந்த அமைப்புக்கு மட்டும் அல்லாமல அதனோடு தொடர்பு ைத்திருப்போருக்கும் பாராதுராமான விளைவை ஏற்படுத்தும். ஒரு அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிடப் பட்டவுடன் அது சேகரித்தல், கொடுத்தல், உடைமையை – அது அந்த அமைப்புக்குப் பயன்படுமானால் அல்லது அந்த அமைப்புக்கு நன்மை நல்குமானால் - அந்த அமைப்பு எதன்பொருட்டு அதனைப் பயன்படுத்தும் என்பது பொருட்படுத்தாது - கொடுக்குமாறு ஒருவரை அழைத்தால் அது 10 ஆண்டுகள் வரை நிறைத்தண்டனை வழங்கக் கூடிய குற்றவியல் குற்றமாகும். இது தன்னார்வத் தொண்டர்களாலும் தன்னிச்சையாக வழங்கப்படும் கொடுப்பனவாலும் இயங்கும்
உ.த.இயக்கம் போன்ற அமைப்புக்குப் பெரிய அழிவாகும். இந்த விதிகளின் நோக்கம் நம்பமுடியாதவாறு விசாலமானது. இதுவரை எந்த நடுவர்மன்றமும் குறிப்பிட்ட விதிகளின் உண்மையான நோக்கத்தை ஆராயவோ அல்லது பொருள்பெயர்க்கவோ வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே உ.த.இயக்கத்தின் சமூக நூலகத்துக்கு ஒரு நூலை யாராவது அன்பளிப்புச் செய்தால் அது குற்றமாகக் கருதப்படலாம். உ.த.இயக்கத்தால் பிள்ளைகளுக்கு
நடத்தப்படும் ஒரு விளையாட்டுப் போட்டிக்கு கருவிகளை அன்பளிப்புச் செய்தால் – அது ஒரு பந்தாகக் கூடாக இருக்கலாம் - குற்றமாகக் கருதப்படலாம். தமிழ்மொழி வகுப்புகளுக்கு கல்வி தொடர்பான பொருட்களை அன்பழித்தல் குற்றமாகக் கருதப்படலாம். இதனோடு ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தி அவமானப்படுத்துவதை
கூட்டிப்பாருங்கள்?

அப்போதுதான் இப்படியான ஒரு முடிவை எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டும் பொதுமக்களது கூர்ந்த ஆய்வு மற்றும் நீதியியல் மேற்பார்வை மற்றும் எமது அரசமைப்புச் சட்டம் வழங்கும் நடைமுறைப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதன் அவசியம் புரியும்.

நாங்கள் உ.த. இயக்கம் பட்டியல் இட்டதை எதிர்த்து வழக்காட ஒரு சட்டப் பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கவுள்ளோம். அதில் வழக்கறிஞர்களும் கனேடிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெறுவார்கள். அதற்கும் உ.த. இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்ய விரும்புவர்களுக்கு அது பற்றிய விபரத்தை விரைவில் வெளியிடுவோம்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவற்றுக்கான பதில்கள் நடுவர் மன்றத்தில் அளிக்கப்படும் என்று ஆயசடலள னுயஎனைந சொன்னார். எங்கள் மீது சாட்டப்படும் ஒவ்வொரு குற்றத்துக்கும் தகுந்த பதில் அப்போது அளிக்கப்படும் என்றார். உ.த.இயக்கத்தினருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு நிச்சயமாக அப்படி ஒன்றும் இல்லை என்றார். .உ.த.இயக்க ரொறன்ரோ அலுவலகத்தை கவல்துறை மூடிவிட்டதா என்ற கேள்விக்கு அப்படி இல்லை – மொன்றியல் உ.த.இயக்க அலுவலகம் மூடப்பட்டது ஆனால் ரொறன்ரோ அலுவலகம் அப்படி மூடப்படவில்லை. அதன் காப்பகக் கணக்குகள் மட்டும் உறையப் போடப்பட்டிருப்பதாகப் பதில்
அளித்தார்.

உ.த.இயக்கம் கனேடிய தமிழர்களிடம் வலுக்கட்டாயமாகப் பணம் அறவிடப்பட்டது எனக் குற்றம்சாட்டபடுவது பற்றி உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்குப் பதில் அளித்த உ.த.இயக்க துணைத் தலைவர் தங்கவேலு அவர்கள் அந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாகவும் இது தொடர்பான ஒரு வழக்குத்தானும் காவல்துறையினால் தொடுக்கப்படவில்லை என்றார். வழக்கறிஞர் ஆயசடலள னுயஎனைந் வருகை தந்த செய்தியாளர்களுக்கு மீண்டும நன்றி கூறி செய்தியாளர் மாநாட்டை முடித்து வைத்தார். ரொறன்ரோவில் உள்ள முக்கிய ஊடகங்கள் - செய்தித்தாள்கள், வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. [THE END]

World Tamil Movement explains in press in Canada

உ.த.இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிடப்பட்டதை எதிர்த்து முழுப்பலத்தோடு நீதிமன்றத்தில் வழக்காடுவோம்! எமது வாயை யாரும் மூட முடியாது! கனேடிய நீதித்துறையில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு! செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் தலைவர் சூளுரை

(உலகத் தமிழர் இயக்கம் கனேடிய அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பான செய்தியாளர் மாநாடு யூன் 19 (வியாழக்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கீழ்நகர் புறம் இல. 11 பிரின்ஸ் ஆர்தர் அவெனியூவில் உள்ள வழக்கறிஞர்கள் Ruby and Marlys Edwardh அலுவலக நூலகத்தில் நடைபெற்றது. அங்கு உ.த.இயக்க முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பல் அவர்கள் விடுத்த செய்தி அறிக்கையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

வணக்கம். இந்த முக்கிய ஊடகவியலாளர் மாநாட்டுக்கு நீங்கள் வருகை தந்திருப்பதற்கு முன்கூட்டியே எனது நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பெயர் சித்தா சிற்றம்பலம். சில நாட்களுக்கு முன்னர் வரை நான் உ.த.இயக்கத்தின் தலைவராக இருந்தேன்.

என்னுடன் Ruby & Edwarde வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த Marlys Edwarde இருக்கிறார். இவரையே உலகத்தமிழர் இயக்கத்தின் வழக்குரைஞராக உ.த.இயக்கம் அமர்த்தியுள்ளது. அவரோடு வழக்கறிஞர் Adriel Weaver அவர்களையும் அமர்த்தியுள்ளோம். மேலும் Jackman and Associates குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் Barbara Jackman இணை வழக்கறிஞராகச் செயல்படுவார். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இன்று இங்கு வருகை தர முடியவில்லை.
கனேடிய குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் கடந்த திங்கட்கிழமை (யூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day உ.த.இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பது நீங்கள் அறிந்த சங்கதியே.

ஒரு சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் மீது குற்றவியல் குற்றம்சுமத்தி கனேடிய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு உ.த.இயக்கத்தின் இயக்குநர் அவை, அ.த.இயக்கம் வழங்கிய சேவைகளால் பயனடைந்த பல்லாயிரக்கணக்கான கனேடிய தமிழர்கள் மற்றும் கனேடிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.

கடந்த பல நாட்களாக உ.த.இயக்கத்தின் தன்மை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தவறுதலான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இன்று எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி உ.த. இயக்கம் என்ன செய்கிறது அது எதற்காகப் பாடுபடுகிறது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன்.

உ.த.இயக்கம் 1986 இல் ஒரு இலாப நோக்கற்ற குழுமமாக ஒன்ராறியோவில் பதிவு செய்யப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக பல்லாயிரக கணக்கான கனேடிய தமிழர்களுக்கு குடியமர்வு, உளவளத்துறை மற்றும் பண்பாட்டு சேவைகளை வழங்கி வந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் 200,000 கனேடிய தமிழர்கள் வாழ்கிறார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையோர் ஸ்ரீலங்கா அரசின் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு அஞ்சி ஏதிலிகளாக இங்கு ஓடிவந்தவர்கள் ஆவர்.

தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் வேண்டிய எல்லாவித உதவிகளையும் உ.த.இயக்கம் அக்கறையோடு வழங்கியது.

கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற் பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புகள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனேடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உ.த.இயக்கம் வழங்கி வந்துள்ளது. உ.த.இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களது உழைப்பினாலும் மக்களது நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த ஒரு அமைப்பாகும்.

உ.த.இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிட்ட காரணமாக இந்தச் சேவைகளை தொடர்ந்து கனேடிய தமிழர்களுக்கு வழங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. உ.த.இயக்கம் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்டிடத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இயக்குநர் அவை உறுப்பினர்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளார்கள். இன்று முதற்கொண்டு உ.த. இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். 16,000 நூல்களைக் கொண்ட நூலகமும் பொதுமக்களுக்கு மூடப்படும்.

உ.த.இயக்கம ஸ்ரீலாங்காவின் வட-கிழக்கில் வாழும் தமிழ் மக்களது தன்னாட்சி உரிமையை ஆதரிக்கிறது என்பது ஒன்றும் இரகசியமல்ல. இது ஒரு அரசியல் நிலைப்பாடாகும். எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள் என்றில்லை. ஆனால் அரசியல் சட்டத்தின்படி அதனைச் சொல்வதற்கு எமக்கு உரிமை இருக்கிறது. எங்களில் பெரும்பாலோர் கனடாவுக்கு வந்ததே இந்த நாடு ஒவ்வொரு குடிமகனும் தனக்கு விருப்பமான கருத்தை வைத்திருக்கவும் தெரிவிக்கவும் உரிமையுடையவர்கள் என்பதைக் கட்டிக் காப்பதாலேயே.

துரதிட்டவசமாக இந்த உரிமைகள் ஸ்ரீலங்காவில் சமமாகக் கடைப் பிடிக்கப்படுவதில்லை. உ.த.இயக்கத்தைப் பட்டியலிட்டது ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். ஸ்ரீலங்காவின் பாரதூரமான மனிதவுரிமை மீறல்களை அய்க்கிய நாடுகள் அவை மற்றும் பொதுமன்னிப்பு அவை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே.

கனடாவில் உள்ள சமூக அமைப்புக்களைக் குற்றவாளிகளாக சித்திரிக்கப்படுவதற்குப் பதில் கனேடிய அரசு ஸ்ரீலங்காவில் அமைதி முயற்சியை முன்னெடுத்திருக்கலாம். தற்போதைய மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நல்கி இருக்கலாம்.
கனேடிய அரசின் நடவடிக்கையானது எங்களது அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற் படி என நம்புகிறோம். புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்துவிடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே இதனை நாம் பார்க்கிறோம். கனேடிய அரசின் அறிவித்தல் எம்மைக் கறைபடுத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது என முழு சமூகமும் நினைக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியல் இட்ட பின்னர் கனேடிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகக் குறிப்பிடத்தகுந்த எதிர்விளைவுகள் ஏற்பட்டன. பலர் பள்ளிக்கூடங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரபட்சமாக நடாத்தப்பட்ட அனுபவத்துக்கு உள்ளானார்கள். இப்போது உ.த. இயக்கம் பட்டியல் இடப்பட்டது முன்னரைவிடப் பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை கனேடிய தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட கனேடிய தமிழர்களிடம் இருந்து எமக்குக் கிடைத்த பேராதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களது எதிரொலிப்பும் எங்களது எதிரொலிப்பும் சொல்லும் செய்தி என்னவென்றால் எமது வாயை யாரும் அடைத்துவிட முடியாது என்பதுதான்.

எனவே உ.த. இயக்குநர் அவை உ.த.இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து முழுப்பலத்தோடு நீதிமன்றத்தில் வழக்காடுமாறு தனது வழக்கறிஞர்களைக் பணித்துள்ளது. கனேடிய அரசின் இந்த நடவடிக்கை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்துரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக நாங்கள் பார்க்கிறோம். கனேடிய அரசியல் சட்டத்தைத் கனேடிய நீதித்துறை உறுதியாகக் கடைப் பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை முழு அக்கறையோடு முன்னெடுப்போம்.

உங்கள் நேரத்தையும் பொருட்படுத்தாது இங்கு வருகை தந்ததிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. [THE END]