20.3.08

'Sri Lankan Embassy in Chennai is spying in Tamil Nadu?' - [Kumutham Reporter - 23.03.2008]


வடக்கு _ கிழக்கு இலங்கையில் மட்டும் வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்’ (LTTE in the eyes of Tamil Nadu). இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில், தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட்டும் பொறுப்பாகத் தேடித் திரட்டி அந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக¢கிறது.
‘மனிதம்’ என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் செயல் இயக்குனர் ‘அக்னி’ சுப்ரமணியம் என்பவரின் கையில் இந்தப் புத்தகம் சிக்க, அதை அவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். தமிழர் பாதுகாப்புப் பேரவைக¢ கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘‘தமிழீழத்துக்கு எதிரான இந்தப் புத்தகத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகம் மூலம் தமிழகத்தில் விஷத்தைப் பரப்பி வரும் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தடை செய்ய வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

ராசீவ் காந்தியை கொன்றவன் யார்? சதிகாரக் கூட்டம் எது? - திருச்சி வேலுசாமி

ராசீவ் காந்தியை கொன்றவன் யார்? சதிகாரக் கூட்டம் எது? - திருச்சி வேலுசாமி

“வாடிய பயிரைக்கண்டு வாடும் நெஞ்சம் வேண்டும்” என்ற வள்ளலாரும், பற்றிப் படர கொழுகொம்பின்றி தவித்த முல்லைக் கொடிக்காக, தான் ஏறிவந்த தேரையே கொடிபடர நிறுத்தி விட்டுப் போன பாரிவள்ளல் போன்றோரும் பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்த புண்ணிய பூமிதான், நமது தமிழ் மண். இந்த மண்ணில் நவீன விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகத்தரத்திற்கு இந்தியாவை உயர்த்திக் காட்டிய முன்னாள் பிரதமர் திரு. ராசிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட செய்திகேட்டு பதறித்துடிக்காதவர்கள் எவரும் இலர். தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள தாய்மார்கள் கூட, தங்களது சொந்த பிள்ளை மரணமடைந்ததைப்போல் துக்கத்தில் தவித்ததை நாடறியும்.
தமிழ் மக்களை நேசித்த இளம் தலைவர் ராசீவ் காந்தி மறைந்து ஏறத்தாழ 17 ஆண்டுகள் கடந்தும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததும், சதிகாரர்கள் கண்டறியப்படாததும் இந்த தேசத்தின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இந்தியர்கள் அனைவருக்கும் மாபெரும் அவமானம்.

இந்த படுகொலையின் காரணமாக பலஅப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர் என்பது கசப்பான உண்மை. ஆனால், அந்தக் கொலைச்சதியில் சம்மந்தப்பட்ட சதிகார்களில் சிலர் அரசின் பாதுகாப்போடு மகிழ்ச்சியாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. ராசீவ் படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட குள்ள நரிக்கூட்டம், தங்களின் சாமர்த்தியத்தால் ஒரு சிலரை “பலிகடா”வாக்கிவிட்டு வழக்கை முடித்துவிட நினைத்தது. நல்லவேளையாக அப்படி நடைபெறவில்லை.

தமிழர்களின் மீது விழுந்த இந்தப்பழி இன்றளவும் நிலைக்க, தமிழினப் பகைவர்களும், ஏகாதிபத்திய சக்திகளும் காரணமாக இருந்தாலும்;;;; ஒருசில தமிழகத் தலைவர்களின் சுயநலமும் காரணம் என்பதனை மறுக்க முடியாது.
திரு. குஐ;ரால் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசில் தி.மு.கழகத்ததைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அங்கம் வகித்தபோது, “தலைவர் ராசீவின் கொலைக்குக் காரணமான தி.மு.கழக அமைச்சர்களை நீக்காவிட்டால், ஆட்சியைக் கவிழ்ப்போம்”, என்று எச்சரித்த காங்கிரஸ் சொன்னபடியே அந்த ஆட்சியைக் கவிழ்த்தது. அதே காங்கிரஸ்தான் இப்போது தனது தலைமையில் நடைபெறுகின்ற மத்தய அரசில் தி.மு.கழகத்தை சேர்ந்த ஏழு பேர்களை அமைச்சர்களாக வைத்திருக்கிறது.

“ராசீவ் கொலைச் சதியில் முக்கிய பங்கு வகித்தவர், திரு.முப்பனார்”, என்று முன்னாள் பிரதமர் திரு. நரசிம்மராவை மேடையில் வைத்துக் கொண்டே சேலத்தில் ஆவேசமாக குற்றம் சாட்டிப் பேசியவர் செல்வி nஐயலலிதா. அடுத்த தேர்தலில் திரு. மூப்பனாரை மேடையில் வைத்துக்கொண்டு அவரை nஐயலலிதா பாராட்டி புகழாரம் சூட்டியதையும் மறக்கமுடியாது.

“ராசீவின் கொலைகச்சதியில் பெரும்பங்கு nஐயலலிதாவுக்கு இருக்கிறது. அவரை விசாரிக்க வேண்டும்”, என்று nஐயின் கமிஷனில் பிரமாண வாக்குமூலம் அளித்தவர் திரு. சுப்ரமணிய சாமி. “குள்ளநரி புத்தி கொண்ட மோசடிப் பேர்வழி சுப்ரமணிய சாமி. அவரை நம்பாதீர்கள்”, என்று சொன்னவர் nஐயலலிதா. ஆனால், “பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்க வந்த புரட்சித்தலைவி”, என்று nஐயலலிதாவை சுப்ரமணிய சாமியும், உலகப்பொருளாதார மேதையாக விளங்குகின்ற அறிவுஐPவி ‘சாமி” என்று புகழாரம் சூட்டிக் கொள்வதோடு அடிக்கடி விருந்துண்டு மகிழ்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலுக்கு சில தலைவர்கள் துணைபோனதால் ராசீவ் கொலையில் உண்மையை கண்டறியும் விசாரணையில் தொய்வு என்பதனை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த கடந்தகாலத்தவறுகளைக் களைந்து விட்டு பொறுப்பான சில பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

இந்த கோரக்கொலையின் வாயிலாக தமிழ் இனத்தின் மீது களங்கமும், தீராப்பழியும் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதனை மறுப்பதற்க்கில்லை. தமிழினத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கறையைத் துடைக்க வேண்டுமானால், உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். அது இன்றைய தலைமுறைத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

அன்மையில் தர்மபுரி காவல் நிலையத்தில் திருட்டுபோன துப்பாக்கிகள் வாழைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனாலும், உண்மையைக் கண்டு பிடிக்க பலரை உண்மை கண்டறியும் கருவியில் பரிசோதித்தார்;கள் என்ற செய்தியும் வந்தது. உயிரோ, உணர்ச்சியோ இல்லாத துப்பாக்கிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையை இந்திய தாயின் மதிப்பு மிக்க மைந்தன் ராசீவின் படுகொலைக்கு காரணமானவர்களை ஏன் உட்படுத்தப்படவில்லை?

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே nஐயின் கமிஷனில் நான் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை சுமத்திய சுப்ரமணிய சாமிக்கு எதிரான பிரமாண வாக்குமூலத்தை அளித்துள்ளேன். ராசீவ் கொலைக்கு பெரிய அளவில் துணை போனவர்கள் என்று அன்னை சோனியாவையும், அவரது தாயாரையுமே சொல்கிற அளவுக்கு திரு. சுப்ரமணிய சாமிக்கு “திமிர்” எப்படி வந்தது.

காலம் கடந்தாலும் இப்போதாவது எல்லோருடைய சந்தேகப்பார்வையின் மையப்புள்ளியாய் விளங்குகின்ற திரு. சுப்ரமணிய சாமியை உண்மை கண்டறியும் கருவியில் பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வற்புறுத்துகிறேன். இதில் உள்நோக்கம் எனக்கு இருப்பதாக யாரும் நினைத்தால், முதலில் என்னை பரிசோதிக்கலாம்.

இந்த நியாயமான எனது கோரிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகிறேன். மத்திய அரசு எனது கோரிக்கையை நிராகரிக்குமானால், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
20-03-2008
===========================
The above statement was released at a Press Meet at Chennai Press Club, Chennai
On behalf of Periyar Anna Peravai, a Press Meet was organised at Chennai Press Club at 11 am on 20-03-2008.
Participants :
  • Mr. Agni Subramaniam, Executive Director, MANITHAM - Human Rights Org.
  • Mr. Trichy Velusamy, a prominent Congress personality.
  • Mr. Trichy Soundararajan, former MLA, Tamil Nadu Assembly.
  • Prof. A.S.Manian, a well know Tamil Scholar
  • Mr. Inqulab, Lyrics writer.

Mr. Trichy Velusamy, a prominent Congress member, has openly declared that Mr. Subramania Swamy and Mr. Chandra Swamy are the culprits behind Rajiv assassination.

14.3.08

தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இந்தியா நடைமுறைப் படுத்த எத்தனிப்பது அறிவீனம்

தமிழீழ அரசியலில் காக்கை வன்னியன் ஆகவும், தொழுநோயாளி போலவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ்மக்களைக் கடத்திக் கொலை செய்துவரும் சிறிலங்கா துணை இராணுவக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவை இந்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் புதுடில்லியில் சந்தித்து 13ஆவது சட்ட திருத்தம் பற்றி ஆலோசனை நடத்தியதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறந்தள்ளி விட்டு தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட டக்லஸ் தேவானந்தாவை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முகமாக பா. சிதம்பரம் உட்பட மற்றவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது இந்தியா இன்னமும் வி.புலிகளுக்கு எதிராக ஒரு செயற்கையான (synthetic) தலைமையை உருவாக்கும் முயற்சியைக் கைவிட வில்லை என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகிறது.
  • டக்லஸ் தேவானந்தா தமிழ்நாடு காவல்துறையால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் ஒரு கொலைக் குற்றவாளி ஆவார். 1986 இல் சென்னை, சூளைமேட்டில் வைத்து அய்யாவு என்ற தலித் பட்டதாரியைச் சுட்டுக் கொலை செய்ததற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர். பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடப்பட்ட போது தமிழ்நாட்டைவிட்டு ஓடி இலங்கைக்கத் தப்பிச் சென்றவர். எனவே அவர் ஒரு தேடப்படும் கொலைக் குற்றவாளி ஆவார்.

  • பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் திவ்வியராசன் ஒக்தோபர் 19, 2000 இல் அவரது வீட்டில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திவ்வியராசனைக் கொலை செய்தவர்கள் இபிடிபி ஆயுத கூலிக் குழுவைச் சேர்ந்தவர்கள். அந்தக் கூலிக் குழுவைச் சேர்ந்த டேவிட மைக்கல் கொலின்ஸ் கைது செய்யப்பட்டான். ஆனால் அவன் டக்லஸ் தேவானந்தாவின் உதவியுடன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி இலண்டனுக்கு ஓடிவிட்டான். இவ்வாறான சாமுத்திரிகா இலட்சணம் படைதத ஒருவரோடுதான் இந்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் கைகுலுக்கி இனச் சிக்கல்பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
"சிறிலங்கா அரசியல் யாப்பின் 13 ஆம் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதனை வரவேற்கின்றோம் என்றும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு இந்தியா மேலதிகமாக உதவும்" என்ச் சிவசங்கர் மேனன் கூறியிருக்கிறார்.

"இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசத்துக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணபதில் பாரிய பங்களிப்பை இந்தியா செலுத்த உள்ளது" என்று எம்.கே.நாராயணன் கூறியதாக டக்ளஸ் தேவானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகற்கனவு கணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக இந்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே. நாராயணன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு உண்டு.

13 ஆவது சட்ட திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த மிதவாதத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட திருத்தமாகவும். அந்தத் திருத்தத்தின் கீழ் 1999 இல் மாகாணசபைககு நடத்தப்பட்ட தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. அந்தச் சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்தத்தான் இந்தியா இப்போது ஒற்றைக் காலில் நிற்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மிதவாதத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இருபது ஆண்டுகள் கழித்து நடைமுறைப் படுத்த இந்தியா எத்தனிப்பது அறிவீனமாகும். அது வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய கதை போன்றது. இந்த 20 ஆண்டு காலத்தில் விடுதலைக்குத் தமிழ் மக்கள் கொடுத்த விலை - பலி கொடுத்த உயிர்கள் - சிந்திய குருதி - மிக மிக அதிகமாகும்.

கடந்த காலத்தில் இராசீவ் விட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் இந்தியா செய்ய ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது என்பது எமக்கு விளங்கவில்லை. மத்திய காங்கிரசின் இந்த தமிழ் விரோதப் போக்குக்கு தமிழக முதல்வரும் காரணம் என நாம் நினைக்கிறோம்.

"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுவே திமுக வின் வெளியுறவுக் கொள்கை" என்ற தமிழக முதல்வரின் குழந்தைத்தனமான அறிவிப்பின் வாயிலாக தனது குடுமியை அவர் திலலிக்குக் கொடுத்துவிட்டார்.

வி.புலிகளை ஓரங்கட்டிவிட்டு தமிழர்களுக்குள் இருக்கும் எட்டப்பர்களின் துணையோடு 13 ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு எத்தனிப்பது மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினவன் கதையாகவே முடியும். இதனை உறைப்பாக இந்திய அரசுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது. [THE END]

தமிழீழம் தமிழகம் இந்தியா

மார்ச்சு 12 2008
திரு. கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
தமிழ்நாடு
தமிழீழம் தமிழகம் இந்தியா

அன்புடையீர் வணக்கம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம. இந்திய அரசின் துரோகத்தாலேயே தமிழீழ விடுதலைப் போராடடம் தள்ளிப் போட்டுக்கொண்டு போகிறது.

ஒரு புறம் "இலங்கைத் தமிழர் மலேசியத் தமிழர் பற்றிய கரிசனை எங்களுக்கு உண்டு. அமைதி வழியில் தமிழர்களது வேட்கையை நிறைவு செய்யும் வண்ணம் இனச சிக்கல் (“The interests of ethnic Thamils in Sri Lanka as well as in Malaysia mattered to Delhi. The way forward lies in a peacefully negotiated settlement within the framework of a united Sri Lanka acceptable to all communities, including the Thamils. India was concerned about the recent violence in that nation and was "closely monitoring" the developments. India has welcomed the "declared intention" of Sri Lanka to fully implement the 13th Amendment, a move that could give a degree of autonomy to Thamil-dominated regions in that country.”) தீர்க்கப்படவேண்டும்" என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி சொல்கிறார். மறுபுறம் இந்தியா சிறிலங்காப் படைக்கு ஆயுதம் ராடர். போர்க் கப்பல் உளவுத் தகவல் சிறப்புப் பயிற்சி போன்ற-வற்றைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் மக்களை நாளும் குண்டு போட்டுக் கொல்கிற சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்தியப் படைத்துறை அதிகாரிகள் செங்க்ம்பள வரவேற்புக் கொடுத்து வரவேற்கிறார்கள். கஷ்மீர் போர் முனைக்கு இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கூட்டிக் கொண்டு சென்று உபசரிக்கிறார்கள். சிங்கள இராணுவத்தைப் புலிகள் வெல்ல விடமாட்டோம் என்று உறுதிமொழி கொடுக்கிறார்கள்.

இதனை எதிர்த்து உங்களைத் தவிர வேறு யாரும் அறிக்கைவிட வில்லை. கண்டிக்கவும் இல்லை. ஜெனிவாவில் நடக்கும் அய்யன்னாவின் மனிதவுரிமை அமர்வுகளில் சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களை நியாயப்படுத்திப் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏனைய நாடுகள் பாகிஸ்தான் மற்றும் யப்பான் நாடுகள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் அணுகுமுறை தமிழ்மக்களுக்கு மாறாக இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை இந்தியா பாராட்டி வரவேற்றுள்ளது. இந்தியப் பிரதமர் இந்திய வெளியுறவு அமைச்சர் போன்றோர் சவுத் புளக்கில் உள்ள பார்ப்பனர்களாலும் மலையாளிகளாலும் பிழையாக வழி நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தவறான ஆலோசனை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற மலையாளி - பார்ப்பான் கே. எம். நாராயணனுக்கு இருக்கும் செல்வாக்கில் நூறில் ஒரு பங்கு கூட தமிழக முதல்வருக்கு இல்லாமல் இருக்கிறது.

சிறிது காலம் முதல்வர் கருணாநிதி தமிழர் சிக்கல் பற்றி சட்ட சபையில் பேசினார். தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் 4 தமிழக மீனவர்களை வி.புலிகள் கொன்றுவிட்டனர் என முன்னாள் காவல்துறை அதிகாரி சொல்கிறான் எனக் கூறி "வி.புலிகளை நாங்கள் ஆதரிகக மாட்டோம். அவர்களுக்குக் கொடுத்து வந்த ஆதரவை எப்போதோ திருப்பிப் பெற்றுக் கொண்டுவிட்டோம் - வி.புலிகளைப் பற்றிய அணுகு முறையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களும் நானும் ஒத்த கொள்கையோடு இருக்கிறோம்" என்று முதல்வர் கருணாநிதி எந்த துக்கமோ வெட்கமோ இன்றி அறிவித்தார். அரசியலில் கீரியும் பாம்பும் போல் இருக்கும் முதலவர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வி.புலிகளைப் பொறுத்தளவில் நிகமும் தசையும் போல் இருக்கிறார்களாம்!

வி.புலிகளை விட்டுவிடுவோம். நாளும் பொழுதும் குண்டு போட்டுக் கொல்லப்படுகிற தமிழ்மக்களுக்கு தமிழக முதல்வர் குரல் கொடுக்க வேண்டாமா? பட்டினி கிடந்து சாகும் சொந்தங்களுக்குக் குரல் கொடுக்க வேண்டாமா? ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா?

நீங்கள் கலைஞர் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று புகழலாம். அனைத்துக் கட்சியினரும் அர்ச்சகர் ஆகலாம்இ பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்இ தில்லை அம்பலத்தில் தேவார - திருவாசகம் பாடலாம் போன்றவற்றை அவர் செய்து முடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய சாதனைகள்தான். ஆனால் அவர் உங்களைப் போன்றவர்கள் பக்கத்தில் இருந்து இடித்தபடியால்தான் இவற்றைச் செய்தார். இல்லாவிட்டால் செய்திருக்க மாட்டார். மேலும் இவற்றை அவர் எப்போதோ செய்து முடித்திருக்க வேண்டும். 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் அதனால் அரசியல் இலாபம் எதுவும் இல்லை என்று முதல்வர் நினைக்கிறார். " தனது அரசு சிறுபான்மை அரசு காங்கிரசைப் பகைத்தால் ஆட்சி பறி போய்விடும்" என்று நினைக்கிறார். அதே சமயம் மத்தியில் திமுக தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது என்பதை அவர் ஏன் சிந்தித்துப் பார்க்க மறுக்கிறார்?

மேலும் "கொள்கை என்பது உடுத்திருக்கிற வேட்டிஇ பதவி என்பது தோளில் போட்டிருக்கிற துண்டு" எனச் சொல்பவருக்கு பதவி பறிபோய்விடும் என்ற பயம் வரலாமா?

முதல்வர் கலைஞர் தமிழீழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய வரலாற்றுத் தவறைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைக் காக்கும் தெய்வம் என்று எண்ணியிருந்த காலம் இருந்தது. இப்போது காக்கும் தெய்வம் காட்டிக் கொடுக்கிற தெய்வமாக மாறிவிட்டதா என்ற அங்கலாய்ப்பு எங்களுக்கு உண்டு. அய்யங்கார் ஜெயலலிதாவுக்கும் தமிழினத் தலைவர் கருணாநிதிக்கும் வேறுபாடு இல்லாமல் இருப்பது மிகவும் வெட்கக் கேடானதாகும். இதனை எமது போகூழ் என்று சொல்லலாமா?

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது வன்னி நிலப்பரப்பின் மீது சிறிலங்கா விமானங்கள் குண்டு வீசியுள்ளன!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க குருதி சிந்தி கண்ணீர் சிந்தி வியர்வை சிந்திப் போராடும் தமிழீழத் தமிழர்கள் அதற்கான விலையைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.போர்க்களத்தில் புலிகள் தங்கள் இளைய இனிய உயிர்களை அந்த விடுதலை வேள்வியில் ஆகுதி செய்து வருகிறார்கள்.

மிக்க அன்புடன்
நக்கீரன், தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா

13.3.08

தமிழ் பாதுகாப்பு இயக்கம் இலங்கைத் தமிழர்களின் மீதான அடாவடியை நிறுத்தகோரி தொடர் போராட்டம்

தமிழ்க்குடி திரு. இராமதாசு அவர்கள் தலைமையில் சென்னை தி.நகரிலுள்ள பிரிசு பார்க் ஒட்டலில் 13-03-2008 காலை 10.30 மணிக்கு, “ஈழத்தமிழர் பிரச்சனையை, இந்திய அரசுக்கு எவ்வாறு கொண்டு செல்வது” என்பது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. திரு. தொல். திருமாவளவன் மற்றும் பா.ம.க தலைவர் மற்றும் சட்டமன்ற பா.ம.க தலைவர் திரு. கோ.க.மணி முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறுபட்ட தமிழியக்கங்கள் சார்ந்த தமிழினத் தலைவர்களும், மனித உரிமை காப்பாளர்களும், திரைப்பட துறையினர்களும், ஊடகவியளாலர்களும், எழுத்தாளர்களும் என பலதரப்பட்ட ஈழ ஆர்வலர்கள் பங்கெடுத்தனர்.
முதலில், இலங்கை கூலிப்படையால் கொல்லப்பட்ட தமிழீழ நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் திரு. சிவநேசன் அவர்களுக்கும் மற்றும் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் இரண்டு நிமிடம் அஞ்சலியுடன் கலந்துரையாடல் தொடங்கியது.
அன்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள், “மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?” கேள்வி கேட்டிருந்த அறிக்கையை திரைப்பட இயக்குநர் திரு. சீமான் வாசித்தார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த தமிழினத் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

“தமிழகத்தின் மக்கள் எழுர்ச்சியுடன், சென்னையில் ஒரு மாபெரும் பேரணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் நடத்தப்பட வேண்டும்” - இராசேந்திர சோழன்.

“இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், திரைப்படத்துறையினர் மற்றும் பிற படித்த மேதைகளுக்கு ஈழத்தமிழர்களின் நிலை குறித்து ஒரு உள்அரங்க கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்” – எழுத்தாளர் செயப்பிரகாசம் (எ) சூரியதீபன்.

“எதிரிகளை நாம் அடக்க வேண்டும்” – திரைப்பட இயக்குநர் திரு. புகழேந்தி.

“ஈழத்தமிழரை காக்க இந்தியா அரசை வலியுறுத்த, லட்சகணக்கில் அஞ்சல் அட்டைகளை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்”. ஒரு தமிழர் கூற, இதற்கு திரு இராமதாசு, “அஞ்சல் அட்டைகள் வாங்கினால் மத்திய அரசுக்கு லாபம் தான் வரும். நாம் போடும் அஞ்சல் அட்டைகள், குப்பை கூடைக்குள் தான் போகும்”, என்றார்.

“ஈழத்தமிழரின் உண்மைகளை ஒரு திரைப்படம் எடுத்தாலே, உலக மக்கள் அனைவரையும், போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து கொள்ள செய்ய முடியும்” - திரைப்பட இயக்குநர் திரு. தங்கர்பச்சான்.

“தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் எதிர்ப்பாளர்களை முதலில் அடையாளம் காட்ட வேண்டும். குறிப்பாய் தமிழகத்தில் செயல்பட்டுவரும் இலங்கை துணை தூதரகம் அன்மைக்காலமாய் “தமிழகத்தின் பார்வையில் எல்.டி.டி.இ" என்ற புத்தகத்தை இலவசமாய் தமிழகத்தில் வினியோகித்து வருகிறது. இலங்கை துணை தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்பட வேண்டும்”, என்ற செய்தியை சொல்லிவிட்டு அப்புத்தகத்தை திரு. இராமதாசு அவர்களிடத்தில் கையளித்தார் மனிதம் - மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் திரு. அக்னி சுப்பிரமணியம். பெற்று கொண்ட திரு. இராமதாசும் மேடையில் வீற்றிருந்தோரும் அதிர்ச்சியுடம் அப்புத்தகத்தை புரட்டி பார்த்தனர். “இது போல் ஒரு புத்தகம் வந்திருப்பது எங்களுக்கு தெரியாது”, என்றனர்.

“செயலலிதா அவர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் கருத்துரிமை மாநாடு நடத்திய என்னை கைது செய்ய சொல்லி ஒரு நாள் முழுக்க தமிழக சட்டமன்றத்தில் பேசிய பேச்சு, முழுக்க முழுக்க இலங்கை துணை தூதுவர் அலுவலகத்தில் தயாரானது தான். இலங்கை தூதரகம் இங்கு உளவு வேலை பார்க்கிறது. இலங்கை துணை தூதுவர் திரு. அம்சா, தமிழராய் இருந்தும் தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இலங்கை தூதரகம் இங்கு தேவையில்லை. அவர்களை முதலில் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்”, என்று உணர்ச்சி பொங்க திரு. திருமாவளவன் பேசிய பொழுது அரங்கம் அதிர கைத்தட்டும் ஒசை கேட்டது.

“தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பாய் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் தொடர் போராட்டம் நடத்தப்படும். முதலில் தொடர் முழக்க போராட்டம் விரைவில் நடத்தப்படும். பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை குழு ஒன்று அமைத்து முடிவுகள் எடுக்கப்படும். என்ன திமிர் இருந்தால் நம்மன்னில் இருந்து கொண்டு இலங்கை தூதரகம் “தமிழகத்தின் பார்வையில் எல்.டி.டி.இ" என்ற புத்தகத்தை கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் விரைவில் முடிவு வரும்”, என்றார் கூட்டத்தை தலைமையேற்றிருந்த திரு. இராமதாசு.
பின்னர் கிழ்கண்ட அறிக்கைகயை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்திய அரசிற்கு உடனடியாய் அனுப்பி வைக்கப்படும், என்ற திரு. இராமதாசு, அந்த அறிக்கையை வாசித்து காட்டினார்.

அறிக்கை : ஈழத் தமிழர் பிரச்சினை - இந்திய அரசுக்கு

கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தொடங்கிய இனப்பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. சபிக்கப்பட்ட இனமாக அங்கே தமிழினம் இனவெறியின் கோரமுகத்தை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 4 தலைமுறைகளை கல்வி இல்லாமல், வேலை வாய்ப்பு இல்லாமல் ஒரு பிரிவினர் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் புலம் பெயர்ந்து நாடோடிகளாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இன, மொழி, மத உரிமைகளுக்காகக் போராடும் குழுக்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவர்கள் கூட, ஈழத் தமிழர்ப் பிரச்சினையை ஏதோ தீண்டத்தகாத விசயமாகக் கருதி புறக்கணித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு ஒன்று, ஈழத்தமிழர்களுக்கு ஒன்று என இரட்டை அளவு கோல் முறையை அவர்கள் கடைபிடிப்பது ஒரு புறம் வியப்பாகவும் மறுபுறம் கசப்பாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் மீதான மும்முனைத் தாக்குதலை இலங்கை இராணுவம் தீவிரமாக்கியுள்ளது. யுத்தத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நியதிகளைக் கூட காற்றில் பறக்க விட்டு, மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சிறார் இல்லங்கள், குடியிருப்புகள் என குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த பாசிச நடவடிக்களை உலகின் பல்வேறு நாடுகளும் கண்டித்து இலங்கை அரசுக்கு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர்.

ஈழத் தமிழர்கள் வேறு நாட்டுக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் தமிழனத்தின் ஒரு அங்கம். இந்தியத் தமிழர்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்தவர்கள். அவர்களுக்கு ஒரு தீங்கு இழைக்கப்பட்டால் அது இங்குள்ளத் தமிழர்களின் உள்ளங்களில் அதிர்வுகள் ஏற்படுத்தும். இதனை யாராலும் மறைத்து விட முடியாது.

அண்மைக்காலத்தில் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண வேண்டும் என்பது இங்குள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

நார்வே நாட்டு அமைதித் தூதுவர்கள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையில் இருந்து தன்னிச்சையாக விலகிக் கொண்ட இலங்கை அரசு, இனப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியிலான தீர்வினைக் காண வேண்டும் என்ற வெறியுடன் ஈழத் தமிழர்கள் மீது மூர்க்கதனமாகத் தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அதற்கு உதவிடும் வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபடக் கூடாது என்பது இங்குள்ள தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாமான தீர்வு காண்பதற்கு இந்திய அரசே முன்முயற்சி எடுத்து செயல்பட வேண்டும். இந்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆராவாக இல்லாவிட்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்குவதில் முழு மூச்சாக இறங்கியுள்ள இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்து விடக் கூடாது. ஆனால் அண்மைக் காலமாக இலங்கை இராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியும், சிறிய இராணுவ தளவாட உதவிகளும் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் இலங்கை அரசுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. எனவே இலங்கை இராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியையும் உதவிகளையும் இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பல்வேறு நாடுகளில் நடைபெறுவது போல் இலங்கையில் ஏதோ ஒரு யுத்தக் குழுவுக்கம் அரசு படைகளுக்கும் யுத்தம் நடைபெறவில்லை. இங்கே ஒரு இனம் தன்னுடைய அழிவைத் தடுப்பதற்காக களத்தில் நின்ளு போரிட்டுக் கொண்டிருக்கிறது. அதை அடக்கி ஒடுக்கி, அந்த இனைத்தையே இலங்கையின் வரைபடத்தில் இருந்து அகற்றி விடும் முயற்சிகள் மூர்க்கத்தனமாக நடைபெற்று வருகின்றன. இதனை இந்திய அரசு உணர்ந்து தமிழ் இனத்தைக் காக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும். அப்படி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இலங்கையில் தமிழனம் அழிந்து போவதற்கு எந்த வகையில் துணையாக இருந்து விடக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் அணுகுமுறையும், நடவடிக்கைகளும் முற்றிலுமாக மாற வேண்டும். ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளைக் காத்திடும் வகையில், இந்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதில், தமிழக அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் மாநில அரசு முன்நின்று மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தான், ஒட்டுமொத்த தமிழகமே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதற்கு தூண்டுகோளாக இருந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே, தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க, நடுவண் அரசிடம் தக்க விதத்தில் எடுத்துரைக்க வேண்டும். அதற்குத் தமிழக மக்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு துணை நிற்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறோம்.

இலங்கை இராணுவத்தின் கொட்டம் அவர்களின் நாட்டோடு நின்று விடவில்லை. முன்பெல்லாம் என்றோ ஒருநாள் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் இன்று தாக்குதல் நடைபெறாமல் ஒரு நாள் கூட விடிவதில்லை. அத்துடன் நிற்காமல் மீனவர்களைக் கடத்திச் சென்றும் துன்புறுத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். அந்த குடும்பங்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதற்கெல்லாம் காரணம் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான். எனவே தமிழக மீனவர்களுக்கு ஆண்டாண்டு காலமாகச் சொந்தமாக இருந்த கச்சத் தீவை மீண்டும் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இலங்கை கடற்படையில் இந்த அடாவடி செயல்கள், தெற்காசியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தியாவுக்கு சாவல் விடும் வகையில் உள்ளன. இந்தியா தொடர்ந்து நிதானம் காப்பது அதனுடைய பெருமைக்கும் பலத்துக்கும் இழுக்காகவே முடியும். இந்த இடத்தில் ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எந்த ஒரு பிரச்சினையிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை இலங்கை எடுத்ததில்லை என்பதை இந்திய அரசும் இலங்கைப் பிரச்சனையில் அரசுக்கு ஆலோசனை கூறி வரும் ஆலோசகர்களும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இலங்கை அரசு செயல்பட்ட முறைகளைப் புரிந்து கொண்டாலே, நிகழ்காலத்தில் எந்த நிலைபாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்பது தெளிவாகும். (முற்றும்)


IN ENGLISH TRANSLATION :

Sri Lanka's ethnic conflict remains unsolved for the past quarter century. The Tamil people become everyday victims of the cruel face of racism. Sinhala ruling class has denied education or employment to almost four generations of Eelam Tamils, and many are leading unsettled lives as immigrants in foreign countries. The institutions that fight against racial, religious and linguistic discrimination too are staying away from asserting their moral stand on Tamil issue, causing surprise and bitterness to those seeking redress.

In this climate, Sri Lanka Army (SLA) has launched a three-pronged attack on the Tamil people. The SLA and security forces have jettisoned basic ethics of warfare and are dropping bombs on schools, orphanages and residential areas. The international community has condemned these incidents and have threatened to stop aid to Sri Lanka.

The people of Tamil Eelam are a part of the Tamil-speaking world. They have a special place in the heart of Indian Tamils. If any harm befalls them, Tamils in Tamil Nadu will not stay silent; no one can hide this truth.

In recent days, several acts which hurt the sentiments of the Indian Tamils have taken place. The Tamils here expect an amicable solution to the problems of the Sri Lankan Tamils. But, the Indian Government has not lived up to the expectations of our people.

The Sri Lankan Government, which unilaterally withdrew from the Norway mediated Cease Fire Agreement, has been pressing for a military solution to the ethnic crisis, and has unleashed brutal attacks on the Tamil people of Eelam. In this circumstance, the unanimous expectation of all Indian Tamils is that the Indian Government should not support the Sri Lankan Government instead, we expect our Government to take initiatives to find a just solution to the problems faced by Eelam Tamils.

Recently, India has given training to the Sri Lankan military, and this has encouraged the Sri Lankan Government to intensify the war on the Tamil people. We urge the Indian Government to stop all military aid to the Sri Lankan Government.

Unlike in many other conflicts, in Sri Lanka, a group has taken up arms to defend its people from genocide. Sri Lankan state has embarked on a focused effort to crush the struggle and to erase the Tamil people from the map of Sri Lanka. The Indian Government should recognize this and work towards saving the Tamil people. It should not be seen as collaborating in Sri Lanka's genocide of Tamils.

We demand that the Indian Government radically change its approach and actions in the Sri Lankan Tamils issue. We request the Indian Government to modify its strategies in order to safeguard the just rights of the Lankan Tamils. The role of the Tamil Nadu Government in this regard is extremely important.

We wish to point out that in the past, State government has spearheaded several initiatives which brought together entire Tamil Nadu people to speak in unison in support of the Tamils of Eelam. Tamil Nadu government without remaining silent must assert its influence in the Centre and shape its policy towards protecting Tamils in Tamileelam. We also request the people of Tamil Nadu to set aside their individual differences and to unite for this cause.

The belligerence of Sri Lanka Navy (SLN) is not confined to Tamileelam. SLN attacks on the Tamil Nadu fishermen have been escalating at an alarming rate. They abduct our fishermen, they torture them, they arrest them. Our fisher families affected by SLN aggression are undergoing severe hardships. Kachchatheevu which was gifted to Sri Lanka by India, is central to the travails faced by Tamil Nadu fishermen. We urge the Central Government to take steps to take control of Kachchatheevu which traditionally belonged to the Tamil Nadu fishermen.

India should assert its supremacy as a regional super power by confronting any challenge from the Sri Lanka Navy in the Indian ocean and Palk straits. India cannot remain mute.

We would also like to point out that Sri Lanka has never taken a pro-India stance in issues important to India in international arena. The Indian Government, advisors and diplomatic staff must be cognizant of Sri Lanka's past diplomatic record. Past behavior is an accurate predictor of future behavior of the Sri Lanka Government. India can ignore this lesson only at its own peril. [THE END] - Courtesy : Tamil Net
==================================================


Stop Indian military aid to Sri Lanka: Tamil Nadu leaders [TIS]


New Delhi unabashedly rolling the red carpet to Sri Lankan military chief Lt Gen Sarath Fonseka has caused a furore among Tamil Nadu politicians who have urged the Indian Central Government to stop all military aid to the genocidal government of Sri Lanka. Paddali Makkal Kadchi (PMK, Toilers' Party) founder-leader S Ramadoss and Viduthalai Chiruththaikal Kadchi (VCK, Liberation Panthers Party) President Thol Thirumavalavan accused the Central Government of sabotaging Tamil aspirations on the Sri Lankan issue by lending support to the military-backed genocide of the Eelam Tamils.


In a joint statement issued on Thursday following three-hour consultations on the Sri Lankan issue at a hotel in Chennai, Ramadoss and Thirumavalavan demanded "an immediate halt to all Indian military aid to the Sinhalese chauvinist regime in Sri Lanka which has directed its entire strength in a barbaric manner against the Tamil people". They have also planned to stage a demonstration against the Indian support to Sri Lankan military.


They pointed out that while the people of Tamil Nadu wanted their Tamil-speaking brethren to live in peace in Sri Lanka, the activities of the Indian Government were totally in violation of these expectations. Both the leaders urged an immediate change in New Delhi's external affairs policy and asked the Tamil Nadu Government to lead the Centre in the right direction in order to protect the lives of the Tamil people in Sri Lanka.


Ramadoss said that both the parties would raise this issue in the forthcoming budget session of the Legislative Assembly.


Thirumavalavan pointed out that the Lankan navy was mercilessly killing innocent Indian Tamil fishermen and in order to effectively combat this menace, he urged the Central Government to immediately reclaim Kachchatheevu. The VCK leader also demanded that the Sri Lankan High Commission office should not remain in Tamil Nadu any longer.


The leaders maintained that they were prepared to sacrifice for the sake of this issue and called for the consolidation of all Eelam supporters in Tamil Nadu under an umbrella organization. [THE END]

9.3.08

ஒரு இந்திய இராணுவத் தளபதியின் அரசியல் வாக்குமூலம்

-சு.ரவி-

'இலங்கையில் தலையீடு" - மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார்.

72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் - இந்தியத் தூதர் ஜே.என்.டிக்சிற்- மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்; ஆகியோர் பலாலிப் படைத்தளத்தில் - ஒரு சந்திப்பின் பின் - ஒன்றாக நின்று எடுத்த நிழல்படம் நூலின் முன் அட்டையை அலங்கரித்துள்ளது.

இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் முதல் 137 பக்கங்களுடன் நூல் நிறைவடைகின்றது. ஏனைய பக்கங்கள் ~இலஸ்ரேட்டட் வீக்லி என்ற இந்தியச் சஞ்சிகைக்கு நூலாசிரியர் 1991 இல் வழங்கிய செவ்வி மற்றும் இந்தியத் தளபதிகளின் கடிதங்கள் - கட்டளைகள்-தகவல்; அட்டவணைகளுடன் நிறைக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் கூறும் தகவல்கள்
ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தினால் ஆரம்பம் முதலே இந்திய சமாதானப்படை குழப்பகரமான நோக்கங்களுடன்- பிழையாக வழிநடத்தப்பட்டன என்று நூலாசிரியர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குழப்பங்களை, பிழைகளைச் சரிசெய்யத் தான் முயன்று தோற்றதாக நூலாசிரியர் சம்பவங்களுடன் கூறுகின்றார்.

தனி ஈழம் என்ற தமிழரின் அரசியல் அபிலாசையை ஈடேற்றக்கூடிய ஒரே இயக்கம் புலிகள் இயக்;கம்தான் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்ததைத் தான் கண்டுணர்ந்ததாக நூலாசிரியர் பிரகடனப்படுத்துகின்றார்.

ஆனால் தமிழ் மக்களிடமிருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்துவதுதான் இந்திய சமாதானப்படையின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று டிக்சிற் கருதினார். இது நடைபெறாதென்று தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

புலிகளின் ஆயுதக் கையளிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பிரதம மந்திரியின் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயலிழந்து போன மற்றைய இயக்கங்களுக்கு ~றோ அமைப்பினர் புதிய ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுத வழங்கலைப்பற்றி டிக்சிற் உட்பட தேவையான அனைவருக்கும் தான் அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வீடியோச் சுருள் ஆதாரத்தையும் தான் டிக்சிற்றிற்குக் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோச் சுருள் புலிகளால் தனக்குத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
சமாதான காலத்தில் பேச்சிற்கு அழைத்துவிட்டு அங்கே தலைவர் பிரபாகரனைக் கொல்ல டிக்சிற் தீட்டிய சதித் திட்டமொன்றையும் நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 14 ஆம் திகதி (1987) தொலைபேசியூடாக டிக்சிற் தன்னை அழைத்து 'பலாலி படைத்தளத்திற்குச் சந்திப்பிற்காகப் பிரபாகரன் வரும்போது அவரைக் கைது செய்யவும் அல்லது சுட்டுக்கொல்லவும்" என்றார். இந்தச் செய்தியைத் தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் நூலாசிரியர் கூறினார். இதற்கு திபேந்தர்சிங் கூறினார் 'வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு சந்திப்பிற்காக பிரபாகரன் வரும் போது அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது" என்று டிக்சிற்றுக்கு அறிவிக்கச் சொன்னார். அதை டிக்சிற்றுக்கு அறிவித்தேன். அதற்கு டிக்சிற் சொன்னார் 'ராஜீவ் காந்திதான் இந்த அறிவுறுத்தலை எனக்குச் சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற இந்தியப்படை தயங்குகின்றது. இதற்கு இந்திய சமாதானப்படையின் கட்டளை அதிகாரி என்ற வகையில் நீர்தான் பொறுப்பு" என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் தகவல் தெரிவிக்கின்றார்.

டிக்சிற்றுடன் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அடுத்தநாள் ஜெனரல் சுந்தர்ஜி தனது கோபத்தை என்னிடம் காட்டினார் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

திலீபனின் ஈகச்சாவு
திலீபனைச் சாகவிடக் கூடாது என்று திபேந்தர்சிங்கிற்கும் - டிக்சிற்றுக்கும் வலியுறுத்திச் சொன்னதாக நூலாசிரியர் எழுதியுள்ளார். அப்படி நடந்தால் அது இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழ் மக்களை மாற்றிவிடும் என்று எச்சரித்ததாகவும் கூறுகின்றார்.

செப்ரெம்பர் 25, திலீபனின் உயிர்பிரிவதற்கு முதல்நாள், திபேந்தர்சிங் ஒரு அறிவித்தலைத் தந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்திக்க டிக்சிற் விரும்புகின்றார் என்பதே செய்தி. அதைப் புலிகளிடம் சேர்ப்பிக்கச் செல்லும் போது வழியில் ஒரு மாபெரும் மக்கள் ஊர்வலம் எதிர்ப்பட்டது என்று நூலாசிரியர் விபரிக்கின்றார். 'தீப்பந்தங்கள்- மாலைகளுடன் பெண்களும் ஆண்களும் இணைந்து நல்லூர் ஆலயம் நோக்கிச் சென்றனர். சாவின் வாசலில் நின்ற திலீபனைச் சந்திக்க அந்த மக்கள் கூட்டம் சென்றது. இந்திய எதிர்ப்பு - சிங்கள எதிர்ப்புக் கோசங்களைக் கூவியவாறு கூட்டம் நகர்ந்தது" என்று நூலாசிரியர் விபரித்துள்ளார்.

பிரபாகரன் - டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர்நீத்தார். பலாலியில் இருந்த தனது தலைமைப்பணிமனையை நோக்கி தலைவர் பிரபாகரன் வந்துகொண்டிருந்த போது திலீபன் மரணித்திருந்தார்" என்று நூலாசிரியர் தனது நினைவுகளை மீட்டுள்ளார்.
'திலீபனின் சாவுடன் ஐ.பி.கே.எவ். மீதான நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது" என்று நூலாசிரியர் கூறுகின்றார்.

இந்தச் சம்பவத்;திற்கு முன் இந்திய அமைதிப்படையையும் ~றோவையும் புலிகள் சரியாகவே இனம் பிரித்து அறிந்து வைத்திருந்தனர். ~றோவின் சதிவேலைகளைப் புலிகள் ஆதாரங்களுடன் தம்மிடம் சமர்ப்பித்தனர் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

படகுத் துயரம்
தளபதிகள் புலேந்திரன் - குமரப்பா உட்பட 12 புலிகளின் இழப்பை நூலாசிரியர் ~படகுத்துயரம் என்ற மகுடத்தில் எழுதியுள்ளார்.

கடலில் 17 புலிகள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி புலிகளிடமிருந்து கிடைத்த உடனேயே அவர்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பிரிகேடியர் பெர்னாண்டசை அனுப்பினேன் என்று நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் தான் சந்தித்திருந்ததால் தலைவரின் மனவோட்டத்தைத் தான் நன்றாக விளங்கிக் கொண்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தப் 17 புலிகளையும் இந்திய அமைதிப் படை பாதுகாக்கத் தவறினால் பிரபாகரனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தான் நன்றாக அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

அந்தப் 17 புலிவீரர்களும் பலாலி வான் தளத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அது இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தைச் சூழ 60 சிங்களப் படையினர் சிங்களத் தள பதிகளால், நிலைகொள்ள வைக்கப்பட்டனர். அந்த 60 சிங்களச் சிப்பாய்களையும் சுற்றி ஒரு பலமான பாதுகாப்பு வேலியைப் போடுமாறு ஒரு இயந்திரப் படைக்கொம்பனிக்கும் - பரசூட் படையணிக்கும் உத்தரவிட்டேன் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

17 புலிகளையும் கொழும்புக்குக் கொண்டுசெல்ல சிங்களப்படை முயற்சித்தால் சயனைட் உண்டு புலிகள் சாகத்தயாராக இருப்பதாகத் தனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் திபேந்தர்சிங்கிற்கு அறிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 05 ஆம் திகதி (1987) பிற்பகல் 2.15 மணியளவில் தனக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்திய) 'இராணுவத் தளபதியிடமிருந்து கர்கிரத்சிங்கிற்கு" என்று அந்தச் செய்தி இருந்தது. அந்தச் செய்தியில்........... பலாலிப் படைத்தளத்தின் சிங்களத் தளபதி பிரிகேடியர் ஜெயரட்ணா தான் விரும்பியதைச் செய்யட்டும். நீர் ஏன் சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலையிடுகின்றீர்.... சிறிலங்காவின் விமானங்களை நீர் தடுக்க வேண்டாம்... என்றிருந்தது. என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ். இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர்.
புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.

புலேந்திரனும் - குமரப்பாவும் ஆளுக்கு இரண்டு சயனைட்டுக்களை உண்டு உயிர் நீத்ததாகத் தனது மருத்துவர்கள் அறிக்கை தந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

'(சிங்கள) எதிரிக்கு அச்சமூட்டும் ஒரு தளபதியாக புலேந்திரன் இருந்துள்ளார்" என்று கூறும் நூலாசிரியர், அவரை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள இராணுவத் தளபதி ஜெனரல் ரணதுங்கா தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை நகரில் இன மோதல் நடந்த இடங்களைத் தான் நடந்து சுற்றிப் பார்த்த போது தன்னுடன் புலேந்திரனும் வந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி குமரப்பா பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது 'யாழ்ப்பாணத்தில் தான் சந்தித்த முதல் புலித்தளபதி குமரப்பாதான்" என்று எழுதியுள்ளார்.

தளபதிகள் புலேந்திரன், குமரப்பா ஆட்களைப் பாதுகாக்க தான் முயன்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களைக் கைவிட்டது டிக்சிற்தான் என்றும் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 08 ஆம் திகதி 1987 ஜெனரல் சுந்தர்ஜி பலாலி வந்து புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தனக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் டிக்சிற்றுடன் நீர் ஒத்துழைக்கின்றீர் இல்லை என்பது தெரியும். அவர் தனது வேலைகளைத்தான் செய்கின்றார். அவருடைய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தனக்கு அறிவுரை வழங்கினார் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

அத்துடன் சில ~பிங்கலர் தாள்களைத் தன்னிடம் தந்து வாசிக்கும்படி கட்டளையிட்டார். புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான ஜெனரல் சுந்தர்ஜியின் சிபார்சுகளைப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பது அந்தப் பிங்கலர் தாள்களைக் கண்டதும் தனக்குப் புரிந்து விட்டதாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

'இன்றிரவே (08 ஆம் திகதி) தாக்கு" என்று லெப். ஜெனரல் திபேந்தர்சிங்கின் முன்னிலையில் ஜெனரல் சுந்தர்ஜி தனக்கு உத்தரவிட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

உத்தரவை நடைமுறைப்படுத்த கிளிநொச்சி - வெள்ளாங்குளம் - முழங்காவில் போன்ற இடங்களில் புலிகளின் முகாம்களைத் தாக்குமாறு தான் படையினரைப் பணித்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் நடந்தது.

ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய புலிகள் போர் தொடங்கியது.
;'பல முனைகளைத் திறந்து யாழ். நகரைக் கைப்பற்ற நான் படைநகர்த்தினேன்" என்கின்றார்.

தான் நடாத்திய சண்டைகளை நூலாசிரியர் வரைபடங்களின் உதவியுடன் விளக்க முயன்றுள்ளார்.

ஐ. ஆனைக்கோட்டை சமர்ஐஐ. யாழ் - பழைய பூங்காவைக் கைப்பற்றும் சண்டைஐஐஐ. சுதுமலை நடவடிக்கைஐஏ. உரும்பிராய் சந்தியைக் கைப்பற்றும் சண்டைஏ. கோப்பாய் சமர்ஏஐ. கந்தரோடைச் சமர்ஏஐஐ. மருதனார்மடம் சமர்
இவ்வாறாகச் சண்டைகளை இனங் காட்டி அந்தச் சண்டைகளின் தன்மைகள் பற்றிச் சுருக்கமாக விபரம் தந்துள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு இராணுவச் சதிமுயற்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கொழும்பிலுள்ள தாஜ் தங்கு விடுதியில் 100 சிறப்புக் கொமாண்டோப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் நூலாசிரியர் தகவல் வெளியிட்டுள்ளார். சண்டை தொடங்கியதும் இந்தக் கொமாண்டோப் படையினர் பலாலிக்கு அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(பெப்ரவரி 1988) இந்திய - புலிகள் போர் தொடங்கி 4 மாதங்களின் பின்னர் லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கின் இடத்திற்கு லெப். ஜெனரல் கல்கட் நியமிக்கப்பட்டார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

லெப். ஜெனரல் திபேந்தர் சிங் ஓய்வுபெற்றுச் செல்ல சில வாரங்களுக்கு முன்னர் (சனவரி 1988) நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்கும் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா சென்றார்.

பணிமாற்றத்திற்கான காரணம் தனக்குத் தெரியாதென்று கூறும் நூலாசிரியர் டிக்சிற்றுடனான முரண்பாடு காரணமாக இருக்கலாம். பிரபாகரனைக் கைது செய் அல்லது சுட்டுக்கொல் என்ற டிக்சிற்றின் உத்தரவைத் தான் மறுத்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1155 இந்தியப்படையினர் புலிகளுடனான போரில் கொல்லப்பட்டனர் என்று நூலாசிரியர் விபரம் தந்துள்ளார்.

03 தொடக்கம் 07 நாட்களுக்கிடையில் படை நடவடிக்கையை முடித்து - புலிகளை அழிக்க முடியும் என்று தான் சொன்னதாக வெளியாகியிருந்த செய்திகளை நூலாசிரியர் மறுத்துள்ளார்.

இந்தக் காலக்கெடுவை ராஜிவ் காந்தியிடம் சொன்னவர் ஜெனரல் சுந்தர்ஜிதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டள்ளார்.

புலிகளுடன் சண்டை தொடங்கினால் அந்தப் போர் பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் நடக்கும் என்று மிசோராம் - நாகலாந்து உதாரணங்களைக் குறிப்பிட்டு லெப். ஜெனரல் றொட்டிற்கோவிற்கு தான் சொன்னதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

றொட்றிற்கோ அதை நம்பவில்லை 'நகர்ப்புற போர்முறையில்தான் புலிகள் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்" என்றும் காரணம் சொன்னார் என எழுதியுள்ளார்.

சமாதானக் காலத்தில் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்தது போல போர்க் காலத்திலும் தலைவரைக் குறிவைத்து இந்தியப்படை நடாத்திய மூன்று சம்பவங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது சம்பவம் போர் தொடங்கிய மறுநாள் நிகழ்ந்தது
அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.....

பலாலியில் இருந்த சிங்கள இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து நான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றைப் பெற்றேன். அதாவது, கொக்குவில் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் போரை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்பதே அந்தத் தகவல். இந்தத் தகவலை லெப். ஜெனரல் திபேந்தர் சிங்குடன் விரிவாகக் கலந்தாலோசித்தேன். தலைவரின் இருப்பிடத்தைத் தாக்கி அழிப்பதற்கான அனுமதியையும்-அதற்குத் தேவையான மேலதிக உதவிகளையும் திபேந்தர்சிங் வழங்கினார். எனது கட்டளைப்பீடத்திலிருந்த திபேந்தர்சிங் அங்கிருந்து மேஜர். ஜெனரல் கல்கட்டிடம் ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். அந்தத் தாக்குதலுக்கான மேலதிக துருப்புக்களை (இந்திய) இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து கேட்டுப்பெறுமாறு அறிவுறுத்தினார். இந்தத் தாக்குதல் தமது படையினரின் ஒருங்கிணைப்பின்மையாலும் - புலிகளின் நேர்த்தியான எதிர்த் தாக்குதல்களாலும் தோல்வியடைந்தது, என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இரண்டாவது சம்பவம் டிசம்பர் 1987 இல் நடந்தது.
வடமராட்சியிலுள்ள ஒரு வைத்தியசாலை வளாகத்தில் நின்றபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததாக ‘றோ’ அமைப்பினர் ஒரு தகவலை வழங்கியிருந்தனர். தாக்குதலுக்காகப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கட்டளை அறையிலிருந்து தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். ஆனால் நடு இரவு தாண்டியும் கடல்வழி தரையிறக்கத்திற்கான கடற்கலம் வந்து சேரவில்லை. விடியத் தொடங்கியதால் துருப்புக்களைப் பின்வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டேன். அப்போது நாங்கள் எங்கே தரையிறங்க இருந்தோமோ! அங்கிருந்து புலிகள் கடுமையாகத் தாக்கினர் என்று நூலசிரியர் விபரித்துள்ளார்.

கடலிலிருந்து பீரங்கிச் சூட்டாதரவு செறிவாகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும் எங்களால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்று களத்தில் தலைமை வகித்துக்கொண்டிருந்த கேணல் சொன்னதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

அடுத்த சம்பவம் வித்தியாசமானது- தமது உளவுத்துறையினரின் தகவல் சேகரிப்புக்களையும்- தமது படைத்தளபதிகளையும் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.
மட்டக்களப்பில் ஒரு புலி பிடிபட்டிருக்குது. அவரை விசாரித்த கொமாண்டர் ~தான் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டேன், அவரைப் பிடித்த மாதிரித்தான் என்பது போல லெப். ஜெனரல் றொட்றிக்கோவுக்கு (மட்டு. ஐ.பி.கே.எவ். தளபதி) அறிவிக்க, இவரும் நம்பிவிட்டார். பிரபாகரனைப் பிடித்து விட்டதாகத் தான் அறிவிக்கலாம் என்று லெப். ஜெனரல் நம்பிவிட்டார். அதனால் என்னையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்புக்குப் பறந்தார். அங்கே சென்று பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது பிரபாகரனைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவித் தமிழன்தான் பிடிபட்டிருந்தான் என்று தெரிந்தது" என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.

முடிவுரை
முறுக்கு மீசை - வெங்கல ஓசைச்சிரிப்புடன் நூலாசிரியரான மேஜர் - ஜெனரல் கர்கிரத்சிங் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்திய சமாதானப் படைத் தளபதிகள் சிலர் எழுதி வெளியிட்ட நூல்களுடன் ஒப்பிடுகையில் கர்கிரத் சிங்கின் இந்த நூல் சற்று வேறுபடுகின்றது.

மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் கருத்துக்களில் வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அவரின் கணிப்பீடுகளில் ஒரு நேர்மை வெளிப்படுத்தப்படுகின்றது. பல உண்மைகளையும் அவர் அம்பலமாக்கியுள்ளார். புலிகளுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அவர் சரியாக இனங்கண்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சமாதானப் படைத் தளபதியாக இங்கே அவர் பணியாற்றிய காலம் குறுகியது. சமாதான காலத்தில் மூன்று மாதமும் - போர்க்களத்தில் மூன்று மாதமும் என மொத்தம் ஆறு மாத காலம் மட்டுமே இங்கே பணியாற்றியிருந்தார். 1988 ஜனவரியில் பணிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

டிக்சிற்றுடனான முரண்பாடும் - அவரது அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்ததும்தான் தனது பணிமாற்றத்திற்குப் பிரதான காரணம் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

டிக்சிற்றுடன் உடன்பட்டு வேலை செய்யத் தவறுவது பற்றி ஜெனரல் சுந்தர்ஜி தன்னைக் கடிந்து கொண்டதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
பிரதமர் ராஜிவ் காந்தியின் குரலாகத் தான் ஒலிப்பதாக டிக்சிற் தன்னிடம் கூறியதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்திய சமாதானப்படைக்கு ஒரு உத்தரவு - இந்திய புலனாய்வுத்துறை ~றோவுக்கு இன்னொரு உத்தரவு என்று ~குழம்பி எழுதும் நூலாசிரியர், அரசியலில் - இராணுவ ரீதியில் பெரும் குழப்பம் இந்தியத் தரப்பில் இருந்ததாகவும் எழுதியுள்ளார்.

நூலாசிரியரின் குழப்பம் பற்றி இங்கே அதிகம் ஆய்வு செய்வதற்கு எதுவுமில்லை.

நூலாசிரியர் கூறுவதுபோல அவை ஒரு ~குழப்பமான செயற்பாடு அல்ல. அவை ஒரு நாடகத்தின் பல்வேறு காட்சிகள்.

இந்திய அரசிற்குப் பெருந் தோல்வியாக முடிந்த அந்த நாடகம் பற்றிய விளக்கங்கள் இங்கே தேவையில்லை.

அரசியல் கணிப்பீடுகளில் நேர்மையும் - வெளிப்படைத்தன்மையும் காட்டிய நூலாசிரியர் தான் நடாத்திய போரில் தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகள் - அழிவுகள் பற்றிய விடயங்களில் நேர்மையையும் கடைப்பிடிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையையும் கைக்கொள்ளவில்லை. அவற்றை ஒட்டுமொத்தமாகவே இருட்டடிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துள்ளார்.

நூலாசிரியர் நடாத்திய மூன்று மாதப் போர் என்பது யாழ் நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மும்முனையில் நடாத்தப்பட்ட ஒரு பாரிய மரபுச்சமர்.

இந்த மூன்று மாதப் போர்க்காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல்.

பிரம்படிப் படுகொலை - கொக்குவில் பாடசாலைப் படுகொலை - யாழ் வைத்தியசாலைப் படுகொலை.... என்பன அவற்றில் முக்கியமானவை.

மக்களின் வாழிடங்கள் மீது ஆட்டிலறிகள் - டாங்கிகளால் சுட்டு - மக்களைக் கொன்றும் - அகதிகளாக்கியும் - பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் யாழ் நகரை ஆக்கிரமித்த ~சாதனையை அவர் எழுதவில்லை. மாறாக, மிக உயர்ந்த கட்டுப்பாடு - ஒழுக்கத்தை இந்தியப் படையினர் கடைப்பிடித்தனர். தமிழ் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றனர் என்று மனச்சாட்சியில்லாமல் நூலாசிரியர் பொய் கூறியுள்ளார்.

அதேபோன்று, யாழ்ப்பாண ஊடகங்களான ஈழமுரசு, முரசொலி மற்றும் புலிகளின் ஒளி - ஒலிபரப்பு நிலையங்களை அழித்த செயலைக் கர்கிரத் வெட்கமின்றி நியாயப்படுத்தியுள்ளார். அந்த ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளை - தகவல்களை மக்களுக்கு நேர்த்தியாக வழங்கி வந்தன. புலிகளின் இராணுவ சாதனைகளை மெச்சிப்பேசி மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன என்று தாக்குதலுக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.

இந்திய - புலிகள் போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும், இரண்டு மாதங்களுக்கும் நடந்திருந்தன. இதில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நடந்த போரின் கதையைத்தான் தனது பார்வையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்த மூன்று மாதகாலப் போருக்குள்ளேயே தலைவர் பிரபாகரன் மீது மூன்று - நான்கு தடவைகள் இந்தியப்படைகள் கொலைத் தாக்குதலுக்கு முயன்றன.
ஆனால், போர் தீவிரமடைந்து வன்னி நிலப்பரப்பு முக்கிய போர்க்களமாகிய பின்னர், தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய இந்தியப் படைகள் பல சமர்களையே நடாத்தியிருந்தன. எல்லாவற்றிலும் இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்தியப்படையின் தோல்விக்கு இந்திய அரசின் குழப்பகரமான கொள்கை - பலரின் தலையீடு என்பன பிரதான காரணம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார். தனது இதே கருத்தையே தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் - ஜெனரல் சர்தேஸ் பாண்டேயும் சொல்லியுள்ளார். என்று நூலாசிரியர் நியாயம் சொல்லி - அதற்கு மற்றைய தளபதிகளையும் துணைக்கு அழைத்துள்ளார்.

ஆனால், தோல்விக்கான காரணம் புலிகள் இயக்கத்திடம் இருந்தது என்பதே உண்மையாகும். தலைவர் பிரபாகரனின் போரியல் திட்டங்களும் - அவரது தலைமைத்துவ ஆளுமையும்தான் முக்கிய காரணங்களாகும். அத்துடன், போராளிகளினதும் - மக்களினதும் வீரத்திலும் - ஓர்மத்திலும் - சுதந்திர உணர்விலும் இருந்தது.
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)
==========================================
Shocking disclosures
Review by : A.G. NOORANI
In his memoirs Maj Gen. Harkirat Singh has reproduced contemporary documents that reveal a lot that was not known about the IPKF in Sri Lanka.

MAJOR General Harkirat Singh (Retd.) is an upright gentleman and a fine soldier; altogether a man of integrity. He was Divisional Commander of 54 Infantry Division when, on July 29-30, 1987, he was sent to Sri Lanka as General-Officer-Commanding (GOC) of the Indian Peace-Keeping Force (IPKF). In January 1988, he got orders “posting me out of Sri Lanka”. The Overall Force Commander (OFC) of the IPKF was the GOC-in-C Southern Command, Lt. Gen. Depinder Singh, who praised him in his memoirs The IPKF in Sri Lanka (Trishul Publications, Noida, 1991).

The “cheerful and enthusiastic” soldier had the misfortune of having to work with two egotistic and flamboyant figures, the Army Chief Gen. K. Sundarji and the High Commissioner J.N. Dixit. On retirement as Foreign Secretary in 1994, Dixit lost no time in setting a unique and disgraceful record as the first officer to denounce his successor publicly in a press interview.

Harkirat Singh paid the price for uprightness: an early ouster in January 1988. Depinder Singh wrote: “All I could do at that stage was to suggest to Harry that he could represent against the posting as the change [and his transfer] were not at my instance. He did and though I recommended his case, it was some months before he was posted from the staff assignment he was on to command Maharashtra and Gujarat Area. Later, I was to question the COAS as to why we had been unfair to Harry; he agreed that we had been unfair but stated that redressal could only come from his successor (Sundarji was to retire on April 30, 1988, and General V.M. Sharma’s name had been announced as the next COAS).” (Emphasis added, throughout.) The wrong was done by Sundarji himself. He passed the buck of redress to his successor, cynically enough.

Depinder Singh’s book contained a damning indictment of the political decision-making process in New Delhi; of the material help the LTTE received in Tamil Nadu even while its men were killing the IPKF’s jawans; of the Research and Analysis Wing’s incompetence and of much else. The IPKF knew that the LTTE remained powerful even after the surrender of arms pursuant to the Indo-Sri Lanka Accord of July 29, 1987. It is unnecessary to recount here the fallout between the Government of India and the LTTE on October 7, 1987, when the IPKF was obliged to go to war.

Depinder Singh writes: “Regrettably, the view taken in New Delhi was that these feelers [from the LTTE] indicated that the end was close and, therefore, the requirement was to stop talking and turn the screw some more. It was quite apparent that Ministry of External Affairs and RAW were recommending a contrary course of action to what the Army was; the tragedy was that their view was prevailing. I remember a telegram the High Commissioner sent from Colombo to Delhi stating inter alia that, according to information available to him, the LTTE collapse was imminent… The reason why the Army view did not or could not prevail, perhaps, can be ascribed to the lack of rapport between the COAS and the Prime Minister – undesirable in normal times, completely fatal in an emergency. I am not aware of why such a situation developed; perhaps it was a fallout of the days preceding Exercise Brasstacks in early 1987 when we almost went to war with Pakistan. Be it as it may, what I do know is that when I queried the COAS as to why our point of view was not being projected, his revealing reply was, ‘Woh Sunta Nahi Hai’ (he does not listen).”

Harkirat Singh was replaced by Lt. Gen. S.C. Sardeshpande whose memoirs, Assignment (Lancer Publishers, 1991), record the same story of ineptness and confusion. Harkirat Singh’s memoirs are different. He has reproduced whole t exts of contemporary documents that fully support his version and reveal a lot we did not know despite all that was written.
“The only orders received by the Commander of 54 Infantry Division in Sri Lanka were the contents of the Indo-Sri Lanka Accord sent at midnight on 29/30 July 1987 from the COAS” with instructions to read out that document “to all ranks prior to their departure” for Jaffna. The chiefs of the Indian Air Force and the Indian Navy “had their reservations” about the despatch of troops.

“The OFC had no operational control over the IAF and the IN, or on the employment of the Indian Army Para Commandos based at Colombo and Palaly. The OFC acted as a link between 54 Infantry Division, and through the Army Headquarters with Air and Naval Headquarters. Unfortunately, Lt. Gen. Depinder Singh believed in giving only verbal instructions. His staff officers, under Maj. Gen. A.S. Kalkat, the MGGS [Major General, General Staff] who headed the Operational and Intelligence Staff at Headquarters OFC, took full advantage of this situation by holding the formation and unit commanders responsible for any act or omission, instead of shouldering the responsibility themselves. The responsibility for issuing written orders was that of the staff who unfortunately never bothered to issue confirmatory orders directive…. It is sad that Maj. Gen. A.S. Kalkat and Brig. Manjit Singh, Commander 41 Infantry Brigade, did not stand by their formation and unit commanders. This can be attributed to the greed for personal benefits. Gen. V.N. Sharma, who took over as COAS after Sundarji, bluntly told me, ‘The Commanders who initially launched the campaign have to pay the price for it and in this scenario, Harry, you had become the prime target.’” Palaly was the headquarters of the IPKF; Chennai of the OFC whose base as Commander, Southern Command, was Secunderabad.

The author writes: “I am unsure of what prompted the Army Chief, Sundarji, to shift me out of Sri Lanka, but one of the factors must have been the letter that India’s High Commissioner J.N. Dixit reportedly wrote to Sundarji in September 1987 since I did not accept his order to shoot/arrest the LTTE supremo. Moreover, someone in the governments of India and Sri Lanka took exception to my remarks to the media in December 1987, that the IPKF took its orders from the Indian government and no one else, and that Indian troops would not leave the island ‘until the Tamils are satisfied and their aspirations are met’. It was probably the turning point which eventually led to my transfer out of Sri Lanka.”

This brings us to three important disclosures. First, RAW began rearming other Tamil groups even while the LTTE was being disarmed in August 1987. The author gave Dixit the damning videotapes which the LTTE had given him. Secondly, on September 11, 1987, he met Dixit. “According to Dixit, the ultimate objective of the IPKF was to discredit the LTTE in the eyes of the local Tamil population. In short, the IPKF was expected to play a double game. I realised that these tactics would not work since the Tamils had already understood that their aspirations for Eelam could be met only by the LTTE. Dixit then turned towards me and said, ‘General, please ensure that the actions of the IPKF are in line with my discussions with the Prime Minister at Delhi. You should adopt a posture of gradual change from negotiations to coercion. The junior commanders during their contact should ascertain the view of the Tamils on the above approach.’”

The last one is shocking: “On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message, emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He [Rajiv Gandhi] has given those instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’ The next morning I received a call from Lt. Gen. B.C. Joshi, the then Director General Military Operations, who supported my stand on Dixit’s directive. However, the COAS, Gen. Sundarji, expressed his annoyance.” In fairness to Rajiv Gandhi, Dixit’s claim that he spoke on his behalf must be rejected. Dixit was prone to bragging and braggadocio.

A meeting was fixed at which Depinder Singh, Dixit and Prabakaran were present. “The talks took place and were very successful and most of us concluded that the IPKF would be out of Sri Lanka by December 1987. All those who attended the meeting felt that the deadlock had at last been broken and that peace was in sight.”

That was not to be. The boat tragedy in October and the suicides by the captured LTTE men led to the break. Dixit and Sundarji thought that Harkirat Singh was soft on the LTTE. The texts of his assessments on September 17 and 20 and on December 5, 1987, show him to be far more perceptive and realistic than Dixit. The Army lost 1,155 men when the IPKF withdrew.

Harkirat Singh paid the price for his uprightness and for being right. The book confirms the need for clear directives to the armed forces at all times. On October 8, 1987, Sundarji ordered him “to launch operations that night itself. I could have prevented the COAS from leaving the Palaly airfield and demanded his orders in writing. Brig. Naveen Rawlley (later Lt. Gen.) did this at Salong airstrip to Lt. Gen. B.M. Kaul, General Officer commanding IV Corps, during the Indo-Chinese conflict in 1962. Headquarters 2 Mountain Division produced this document, written in green ink, with the Division’s War Diary before Lt. Gen. Henderson Brooks during his investigations into the Indian Army debacle.”

If that report had been published many a blunder might have been avoided. It is time to invoke the Right to Information Act to secure publication of the Henderson Brooks Report, 43 years after its submission to the government.
=============================
Shoot Prabhakaran, shoot Mahathiah!

So tell us more about your encounter with the LTTE.

Then I came back from there, from Mahathiah. He gave me a cold drink, I came back. I went straight to [Lieutenant General] Depinder Singh. He had landed. You know his habit. He would take off from Madras, land at 11.30, 12 in the afternoon, take off again by one, and go back to Madras. This was his daily routine. He never came and stayed with me, or saw anything. He used to land in Jaffna and move to Madras. His headquarters had moved to Madras.

All these people used to fly in from Madras to Jaffna and go back. If I was available, they met me. I was never available. I was working from Jaffna town to Ambarai, and I was working from Malaithevu in the east to Manar in the west. I had to hop by helicopter; our troops were all over, all over. So one would start the day early. So whatever it was, it was a sad story.

Then I spoke to Depinder. I said, Prabhakaran must come back if you want me to talk about surrender of weapons. That was the main issue. He picked up the Sri Lankan phone, spoke to Delhi. Then he went back to Madras and pursued the matter. He did a good job.

The next day Prabhakaran's aircraft landed in Jaffna with Prabhakaran and his bodyguards, his wife and children, Kitu, whose leg was blown up, who was his right hand then. The air force pilot wanted a receipt from me saying that I received these souls safely. Then I was told that you will ensure that he reaches safely to Jaffna town and handed over to his people. I said, Fine. We ensured that. We put him and the others in various APCs [armoured personnel carriers] so that if one is blown off, the other is alive. We took them through the Sri Lankan lines to Jaffna.

I told my staff, take a receipt from Mahathiah that he has received Prabhakaran. These are normal formalities. After all, Prabhakaran is not a small man. He is the leader, a charismatic leader of the LTTE. His life is very precious. And a very simple man. No bullshit about him. His wife lived with three saris -- one she wore, one she washed and one was ready to wear. That is all. They never drank Coca-Cola. They offered us Coca-Cola, but never drank it themselves. They drank that goliwala soda.

So that was your first encounter with him?

After all that I said, Prabhakaran, we must meet. He said, General, tomorrow, 11 o'clock. And we landed in the football ground of the Medical College, Jaffna. The entire area was manned by LTTE guns. I got down from the helicopter and looked around. I walked till I met Prabhakaran. He was standing outside a conference hall. He took me to his office. We spoke for five hours. I had to convince him that he should surrender weapons.

And he was convinced?

He gave it in writing. I can show you. The only letter he gave in writing. I flew to Colombo showed it to [then Indian high commissioner to Colombo J N] Dixit. His words: "General what you have achieved the nation will appreciate. And I speak on the behalf of the prime minister of India." These were his words to me at that point of time.

Right. The letter was flashed all over. Surrender ceremony was fixed for 5th of August. Surrender started. Prabhakaran said, I won't come, my political officer will come. Quite right. Atal Bihari tho nahi na jatha hain, minister hein jatha hain [the Indian prime minister doesn't go for surrenders, it is his minister who goes]. So, wo tho nahin aaya [Prabhakaran didn't come]. All the big shots of Sri Lanka were there. Aircraft was there, propellers on.

Athikule [then Sri Lankan defence secretary] said, My orders are that I have to take the first weapon to Colombo and give it to Jayewardane. The surrender took place. A token surrender. Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble.

Why?

Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill. And the whole thing took an ugly turn. They started anti-IPKF demonstrations. Who is to answer? The general officer.

My God, thousands of young girls and children used to come in front in whites and later on what used to happen? When they used to come we used to be careful, they used to go to the ground and behind would be Tigers, with guns. That is how they used to take out our people. You couldn't kill them because there were children in the front, women in the front. We were always fighting with our hands tied behind our backs.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything. In the army headquarters there was a core group headed by defence minister, three chiefs and a few senior officers. They used to take decisions, decisions are given to me by the staff officer. Decisions, if I question, the answer will come, These are orders from higher echelons. Higher echelons, that is the famous answer we got. Higher echelons.

What happened after the surrender came to a standstill?

There was a lot of problems. Ethnic riots broke out. They killed a lot of Sri Lankans, tortured them. Between Tamils, Sinhalese, Tamil Muslims. We did the spadework to stop it. But then the Thilappan fast happened. We tried out best. I went and tried to meet him. LTTE chaps told me, General, the people's emotions are so high that if you appear on the scene they might create a problem. They asked me to stay there. I wanted to go and tell him, Give up. How will he give up?

Unless the assurances given by the prime minister of India are fulfilled I am not giving up, he said. I kept requesting the high commissioner, Come and meet, come and meet, come and meet. He dragged his feet, he delayed it, he didn't come. Finally he came when the man was dead. We should have saved his life, one life.

Then the boat tragedy, I was in a meeting with Mahathiah and Prabhakaran. You know, when we go for a meeting, they used to have two video cameras focused on us, tape recorders, everything. With great difficulty we had a thing like this [he points at this correspondent's recorder]. The poor brigade commander used to keep that recording, then give it to his PA, and then send it to the army headquarters. Whether anybody took action on what our reports were, I don't know.

Even after the riots you were in touch with Prabhakaran?

Oh yes. I never gave up with Prabhakaran. He is a leader of the LTTE. I had all the time to meet him because I knew he was the only man who could solve the problem. Nobody else. Otherwise, you take up arms, and we took arms and look what happened.

And what exactly happened during the boat tragedy in which the LTTE cadres committed mass suicide?

Yes, I was having a meeting with him, I came down from the boat. Mahathiah had come down a little later. Kumaran, the Trincomalee leader, and Pulinderan, the Jaffna leader, they were in the boat. Mahathiah said, General, I want to talk to you. I had a major who could translate. Prabhakaran spoke to me in English many a time. He appeared well-read. He [Mahathiah] said, At all cost these people [who were surrounded by Lankan troops] must be released. IPKF is here to protect the LTTE, and they should not go to Colombo. Otherwise, they will be tortured.
They were 17, four we were able to save. So instead of going to Colombo, we flew them from the naval base to the Jaffna airbase. Now, the tamasha started. There were LTTE, around them were the Indian troops, around us were the Sri Lankan troops, around them were the Indian troops, around them the APCs of Sri Lanka. Now tell me, if you try to fight, there would have been a conflict between the Sri Lankan and Indian troops. Of course, the orders were very clear to the [Sri Lankan] brigade commander, otherwise get into the helicopter and reach Colombo, relinquish the command. Wo tho haath jhod tha tha, ke mein mara ja raha hum kaam kaam kar ke.

Anyway I was told, you go to Trincomalee and prevent reinforcement of Trincomalee by Sri Lankans. Deny the airport to them. I reached Trincomalee, and we took over the control tower, commandos were deployed, no troop movement was allowed. It created lot of ill-feeling with the Sri Lankan troops.

In the meantime, I had said that it was high time that Dixit, who was on leave in Delhi, go to Colombo, and mediate their release in the boat. Depinder Singh also flew, I generally had my hat off to him but he was not a strong man. I needed a commander like Maneckshaw or Rolli who could stand up to the government at the cost of their own service.

So how did the boat tragedy end?

I was guarding the airfield. And all of them came, Depinder, Dixit and some other staff officers. They landed there, they could not convince Jayewardane, and he was too clever for them. Too clever. I cannot have that much say in my country? he asked them. You are given amnesty to them, fulfill it, but these politicians, they couldn't. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they want. Let us go and have a cup of tea with them, with the three chiefs. They were staring at me: This man created all the problems.

Anyway, we had a cup of tea. At 2 o'clock I get a message, why is the G-o-C IPKF interfering in the 'constitutional activities of Sri Lanka? These were the exact words. This message came all the way from the force headquarters in Madras. And, 'Please lift your siege in Jaffna, let the Sri Lankans do what they want to.'

I was upset. I was in Trincomalee; they were in Jaffna, my staff officers, everybody was taking charge of everything. I spoke to my Colonel G S Hoshiar Singh. He said, Saab ea hukhum aya hein. I said, Chod do, aap tho ye mili gaya tho. Chod gaya tho mare jayenge saren. He said, Anyway we have got ambulances, cars, 13, 14 of them, the hospital is all geared up to flush poison.

Our troops withdrew, the Sri Lankan troops charged, and these fellows swallowed cyanide. Those who chewed, they died on the spot, those who swallowed were saved. This created chaos in the Indo-Sri Lankan entity. That the Indian army, IPKF, could not save them. Now this man blames me. This Dixit. The general left them off. Bhai, mene kya bola?

What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.

So who messed up during the boat tragedy?

The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem.

What did you feel when the orders came to leave the LTTE men to their fate?

I felt terribly bad about it. Because Kumaran's wedding was attended by one of my brigadiers. Pulinderan was also there. A dreadful man. Wanted for 34 murders by Ranatunga. Every day he used to tell me, General, mujhePulinderan de do. [give me Pulinderan] " I used to tell him, Pulinderan nahi detha, Pulinderan mere saath mere Jeep mein jhatha hain [I won't give you Pulinderan, he will travel with me in my Jeep]. And they [the LTTE] were very cordial. They would take me anywhere. I had lot of time for them.

Specifically, did Dixit fail?

Dixit had the backing of the prime minister of India. He had a free hand in the affairs of Sri Lanka. He could have thumbed the table and told Jayewardane, sorry you have to do it. And if you don't do it, you know what the results will be. There will be riots, ethnic killings. Dixit could have done it. There was no question about Jayewardane not listening to him. Dixit may be a high commissioner, but he was a high commissioner of great standing. When you have the backing of the boss, you will be on the top of the world. You can make any statement to these people.

6.3.08

இலங்கை துணைத் தூதரகமா? அல்லது தூர்வாரப்பட வேண்டிய தூதரகமா?

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரத்தின் தூதுவர் திரு. அம்சா அவர்களைக் காணவரும் தமிழகத்தின் சக்திமிக்க நண்பர்களுக்கு? பணபலம் வாய்ந்த நபர்களுக்கும்?, ஊடகவியலாளர்களுக்கும்? இலங்கை வெளிவிவகாரதுறை அமைச்சகத்தின் டிசம்பர் 2007யில் வெளியீடான “தமிழகத்தின் பார்வையில் எல்.டி.டி.இ”, (LTTE in the Eyes of Tamil Nadu) எனும் ஆங்கில புத்தகத்தையும் "பிற" பரிசு பொருள்களுடன்! பரிசளித்து வருகிறார். இலவசம் என்றால் வாயை பிளந்து கொண்டு நஞ்சையும் பெற்றுப் பழக்கப்பட்ட சில தமிழ் நண்பர்களுக்கு இப்பரிசு பெரும் பரிசாய் தெரியும்.

புத்தகம் 11.5” x 8.5” அளவில் “தனி சுற்றுக்காக மட்டும்” என குறிக்கப்பட்டு, பிரஸ் பிரின்ட் எனும் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. புத்தகம் அட்டையுடன் சேர்த்து 220 பக்கம் கொண்டுள்ளது. பக்கங்கள் மிக தரமான வார்னிசு காகிதத்தால் அத்தனை பக்கங்களும் பல வர்ணமாய் அச்சிடப்பட்டுள்ளது.
புத்தகம் மூன்று பிரிவாய், தலையங்கம், செய்திகள் - ஆங்கிலம், செய்திகள் - தமிழ் என பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று பிரிவுகளும் தமிழகத்தில் 2007-ல் அச்சிடப்பட்டு வெளியான ஊடகங்களில் “தேவையான” பகுதிகள் மட்டும் படங்களுடன் மறுபதிவு செய்து கையாளப்பட்டுள்ளது.

பின்புற கடைசி அட்டையின் உட்பகுதியில் “அக்நாலேஞ்மென்ட்”, என குறிப்பிட்டு அப்புத்தகத்தின் கட்டுரைகளுக்கு துணையாய் இருந்த ஊடகங்களின் பெயர்கள் (The Hindu, The New Indian Express, Deccan Chronicle, News Today, Frontline, Dinakaran, Dinamani, Dinamalar, Daily Thanthi, Makkal Kural, Maalai Malar, Maali Sudar) குறிக்கப்பட்டுள்ளன.

ஓரே ஒரு பக்கம் “அறிமுகம்” எனப்போட்டு எல்.டி.டி.இ-யை வசைமாறி சொற்களால் பொழிந்து தள்ளியுள்ளனர்.
எல்.டி.டி.இ-யை பற்றி வதந்திகள், இலங்கை அரசின் தகவல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய அதே ஊடகங்களில் வந்த இலங்கை அரசிற்கு விரோமான செய்திகள் முழுக்க முழுக்க மறைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தலே, படித்தாலே இப்புத்தகம் ஒருதலை பட்சமாய் அச்சேரியுள்ளது வெளிப்படுகிறது. என்னதான் இலங்கை அரசு முழு பூசினிக்காயை சோற்றில் போட்டு மறைத்தாலும், வெகு விரைவில் உண்மை செய்தி வெளிவந்து விடத்தான் போகிறது.

2.3.08

சிறிய சைப்பிரஸ் தீவில் இரண்டு சுதந்திர நாடுகள்!

-- நக்கீரன்

கொசேவோவின் ஒரு தலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பல நாடுகளின் அடி வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. குறிப்பாக பெரும்பான்மை தேசிய இனத்தவரின் மேலாண்மையையும் அடக்குமுறையையும் கொடுங்கோல் ஆட்சியையும் திணிக்கும் நாடுகள் மத்தியில் இந்தப் பயம் குடி கொண்டுள்ளது.

அதே சமயம் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போராடும் சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் எதிர்கால நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

கொசோவோவை ஒரு இறையாண்மை படைத்த நாடாக மேற்குலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டு அங்கீகாரம் வழங்கியது பன்னாட்டு அரசியலில் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு அரசியலில் பல முக்கியமான பாடங்களைப் புகட்டியுள்ளது.

முதலாவது பாடம் - அய்க்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் பெரிய நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளைக் கட்டுப்படுத்த உதவாது.
இரண்டாவது பாடம் - நாடுகள் தங்கள் வலிமை, தங்களது நட்பு நாடுகளின் வலிமை, பகை நாடுகளின் வலிமை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.

மூன்றாவது பாடம் - பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவருக்கு விடுதலை வீரனாகக் காட்சி அளிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது.

நான்காவது பாடம் - ஒரு நாட்டின் இறைமை என்பது கட்டற்றது (ழெவ யடிளழடரவந) அன்று. ஒரு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் கல்வெட்டில் எழுதிய எழுத்துக்கள் அல்ல. எல்லைகளும் மீள வரைய முடியாதவை அல்ல.

ஆனால் இந்த அரசியல் பாடங்களை ஸ்ரீலங்கா வேண்டுமென்றே படிக்க மறுக்கிறது. ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சு ஒருபடி மேலே போய் கொசோவோ சுதந்திரம் அடைந்ததைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுதுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டந்தான் அதற்குக் காரணம்.

(அ) கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் சேர்பிய பெரும்பான்மை மக்களின் ஒப்புதலுடன் செய்யப்படவில்லை.

(ஆ) யூன் 10, 2008 இல் நிறைவேற்றப்பட்ட அய்க்கிய நாடுகளின் பாகாப்பு அவையின் தீர்மானம் 1224 எல்லா நாடுகளது இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்வதாகக் கூறுகிறது. ஆனால் அது மீறப்பட்டுள்ளது.

(இ) பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் படி கொசோவோவின் எதிர்காலத் தகுதி பற்றி பேச்சு வார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவது என்பது முற்றாகப் பேசி முடிவு எட்டப்படவில்லை.

(ஈ) கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு உறவுகளைப் பேணுவதில், பன்னாட்டு இறையாண்மை படைத்த நாடுகளை மதிப்பதில் தவறியுள்ளது.

(உ) பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் அமைந்துள்ளது.

“கொசோவோவின் ஒருதலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக அமைந்துள்ளது” என ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது நகைப்புக்குரியது.

ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது போல் இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் புதிய நாடுகள் தோன்றியிருப்பது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மாறாக அவை அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழி கோலியுள்ளது.

கடந்த கால உலக வரலாற்றை காய்தல் உவத்தில் இன்றிப் படிப்போர் புதிய நாடுகளின் தோற்றம் உலக அமைதியை உருவாக்க உதவியுள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்கள்!

அய்க்கிய நாடுகள் நிறுவப்பட்ட போது அதன் உறுப்புரிமை 50 மட்டுமே. இன்று அந்த எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலக அமைதியும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளவேயொழிய குறையவில்லை!

குட்டிக் குட்டி நாடுகள், தமிழீழத்தைவிட அளவிலும் மக்கள் தொகையிலும் குறைந்த சுமார் 50 நாடுகள் சுதந்திர நாடுகளாக அய்க்கிய நாடுகள் அவையில் கொலு வீற்றிருக்கின்றன.

சைப்பிரஸ் நாட்பை பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.

மத்திய தரைக்கடலில் காணப்படும் மூன்றாவது பெரிய தீவு சைப்பிரஸ். சைப்பிரஸ் என்றால் கிரேக்க மொழியில் செப்பு என்று பொருள்.

சைப்பிரஸ் துருக்கியின் தென்திசை கடலோரமாகவும் சிரியாவின் மேற்குக் கரையோரமாகவும் இருக்கிறது.

சைபிரஸ் பலநூற்றாண்டு காலமாக சைப்பிரஸ் தீவு பினீசியன்ஸ் மற்றும் கிரேக்கர்கள் ஆகியோரது கொலனி நாடாக இருந்து வந்தது. 1571 ஆம் ஆண்டு துருக்கி அதனைத் தாக்கிக் கைப்பற்றியது. அங்கு பெருவாரியான துருக்கியரைக் குடியேற்றி தனது கொலனி நாடாக வைத்துக் கொண்டது.

முதலாவது உலகப் போர் வெடித்தபோது பிரித்தானியா சைப்பிரஸ் தீவைக் கைப்பற்றியது. 1925 இல் சைப்பிரஸ் பிரித்தானியாவின் கொலனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

கிரேக்கத்தைத் தாய்நாடாகக் கருதும் சைப்பிரசில் வாழ்ந்த கிரேக்க மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடினார்கள். சைப்பிரஸ் தீவு கிரேகத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடினார்கள். 1955 இல் சைப்பிரஸ் போராளிகளின் தேசிய அமைப்பு (EOKA) பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு கெரில்லா போரைத் தொடங்கியது. 1958 இல் ஆயர் மாகாறியோஸ் ((Archbiship Makarios) கிரேக்கத்தோடு இணைவதற்குப் பதில் சைப்பிரஸ் ஒரு சுதந்திரநாடாக மலரவேண்டும் என்றார்.

இதே சமயம் சைப்பிரஸ் துருக்கியர்கள் சைப்பிரஸ் தீவு கிரேக்கர் – துருக்கியர் மக்களிடை பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள்.

சைப்பிரஸ் தீவு 1960, ஓகஸ்ட் 16 இல் சுதந்திரம் அடைந்தது. கிரேக்கர்களும் துருக்கியர்களும் இணைந்து ஒரு அரசியல் யாப்பை எழுதிக் கொண்டார்கள். ஆயர் மாகாறியோஸ் சைப்பிரஸ் தீவின் முதல் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் வெகுவிரைவில் கிரேக்கர்கள் - துருக்கியர் மத்தியில் சண்டை தொடங்கியது. 1965 இல் அய்க்கிய நாடுகளின் அவையின் அமைதிப்படை அங்கு அனுப்பப்பட்டது.

1974 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் நாள் ஆயர் மார்க்கோஸ் சைப்பிரஸ் தேசிய பாதுகாப்புப் படை நடத்திய புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டார்.

யூலை 20 இல் துருக்கி சைப்பிரஸ் தீவில் வாழும் துருக்கியரைக் காப்பாற்றும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறது எனக் கூறிக் கொண்டு அதன் மீது படையெடுத்து சைப்பிரசின் வடபகுதியை அண்டிய 37 விழுக்காடு நிலப்பரப்பைக் கைப்பற்றியது. இதனால் 180,000 கிரேக்கர்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

1974 யூலை 22 இல் அய்க்கிய நாடுகள் அவை இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. துருக்கிப் படை சைப்பிரசில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஆயர் மாகாறியோஸ் மீண்டும் ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்றார். அடுத்த ஆண்டு சைப்பிரஸ் தீவு கிரேக்கர் பகுதி துருக்கியர் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இடையில் அய்க்கிய நாட்டு அவையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.

1983 நொவெம்பர் 15 இல் துருக்கி சைப்பிரஸ் “வட துருக்கி குடியரசு” எனத் தன்னை ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தியது. ஆனால் அய்யன்னா பாதுகாப்பு அவை அதனை அங்கீகரிக்க மறுத்தது. துருக்கி மட்டும் அதனை அங்கீகரித்தது. இரண்டு சைப்பிரசையும் இணைப்பதற்கு அய்யன்னா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. 2002 இல் கிரேக்க சைப்பிரஸ் அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்டது.

இப்போது 2008, பெப்ரவரியில் கிரேக்க சைப்பிரஸ் ஆட்சித் தலைவர் தேர்தலில் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட Dimitris Christofias என்பவர் 53.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் சைப்பிரஸ் தீவின் இரண்டு பகுதிகளையும் இணைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
சைப்பிரஸ் பற்றிய தரவுகள்:

மொத்த நிலப்பரப்பு - 9,250 சகிமீ (3,355 சகிமீ வட சைப்பிரஸ்)

பருவம் - வெப்பமான கோடை குளிர்மையான

மாரிவளங்கள் - செப்பு, கனிக்கல் (gypsum) மரப்பலகை, உப்பு, பளிங்குக் கல், செந்நிறக் களிமண்

மக்கள் தொகை - 788,457 (யூலை 2007 மதிப்பீடு)
இனங்கள் - 77 விழுக்காடு கிரேக்கர், 18 விழுக்காடு துருக்கியர் எனையவர் 5 விழுக்காடு (2001)

சமயம் - கிரேக்க பழமைவாத சமயம் 78 விழுக்காடு, முஸ்லிம் 18 விழுக்காடு ஏனையவர்கள் 4 விழுக்காடு

நாணயம் - யூறோ
மொழி - கிரேக்கம், ஆங்கிலம்
தலைநகர் - நிக்கோசியா
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் – 210,000 (30 ஆண்டுகளாக கிரேக்கர் மற்றும் துருக்கியர்)

கொசோவோ போலவே சைப்பிரசிலும் வௌ;வேறு இன, மொழி, சமயம் சார்ந்தோர் ஒன்றாக இருக்க முடியாத என்ற உண்மை தெரிகிறது. பிரிந்து சென்றால்தான் இரண்டு இனங்களுக்கு மத்தியில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும். நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.

இறைமை என்பது மக்களுக்குச் சொந்தமானது. இந்த உண்மையை மேற்குலக நாடுகள் கொசோவோ நாட்டைப் பொறுத்தளவில் ஒத்துக் கொண்டுள்ளது. தமிழீழ மக்களின் இறைமையையும் மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய நாடுகளுக்கும் அந்தக் கோட்பாடு விரிவு படுத்தப் பட வேண்டும்.

எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும் என்பார்கள். சுதந்திரத்துக்காகப் போராடி வரும் திபேத், தமிழீழம், பாஸ்க், கஷ்மீர், அசாம், நாகலாந்து, தாய்வான் போன்ற நாடுகளில் நேரடி வாக்கெடுப்பு நடத்தி மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அந்த நாட்டு மக்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளைக் கீறும் உரிமையைப் பெறுகிறார்கள்!

-- நக்கீரன்
பல மாதங்களாகத் தள்ளிப்போட்டு வந்த கொசோவோவின் ஒருதலைப் பட்சத் சுதந்திரப் பிரகடனம் ஒருவாறு அறிவித்தாகிவிட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (Hashim Thaci) சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

“கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12-யை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்...”

சேபியரது பெரும்பான்மை அரசின் அடக்குமுறை, இனச் சுத்திகரிப்பு போன்றவற்றில் இருந்து விடுபட்ட கொசோவோ தனது நாட்டில் இருக்கும் ஏனைய சிறுபான்மை மக்களது உரிமைகள், சுதந்திரங்களை உறுதி செய்ய முன்வந்ததில் வியப்பில்லை. அப்படி உறுதிசெய்ய முன்வராவிட்டால் கொடுங்கோல் செலுத்திய சேபியரது ஆட்சிக்கும் கொசோவியரது ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும்.

இருபது இலக்கம் மக்கள் வாழும் கொசோவோவாவில் 120,000 ஆயிரம் சேபியர்கள் கொசோவோவின் வட பகுதியில் வாழ்கிறார்கள். இவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட போது அவையில் இருக்கவில்லை. நாடாளுமன்ற அமர்வை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள்.

கொசோவோவின் சுகப் பேற்றுக்கு உதவியாக அய்ரோப்பிய ஒன்றியம் காவல்துறை, நீதித்துறை மற்றும் நிருவாகத்துறையைச் சேர்ந்த 2,000 அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. நேட்டோ படைகள் அங்கு அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டும்.

கோசோவோவின் தலைநகர் பிறிஸ்ரினாவில் (Pristina) சுதந்திர நாளை மக்கள் அல்பேனிய, அமெரிக்க, பிரித்தானிய தேசியக் கொடிகளை அசைத்து ஆடிப் பாடிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதே நேரத்தில் சேர்பியாவின் தலைநகர் பெல்கிறேட்டில் கொசோவோவின் சுதந்திரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது (வியாழக்கிழமை) பெல்கிறேட்டில் அமெரிக்காவிற்கு எதிரான பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் யூகோசிலோவிக்கிய குடியரசு கொசோவோ நாட்டோடு சேர்த்து இப்போது எட்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. சேர்பியா, அல்பேனியா, குரோசியா, மொன்ரநீக்றோ, ஸ்லோவேனியா, பொஸ்னியா – ஹேர்ஸ்கொவினா, மசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவையே அந்த எட்டு நாடுகளாகும்.

கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் உலகம் முழுதும் எதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சேர்பியா, உருசியா போன்ற நாடுகள் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கின்றன. கொசோவோவை “பொய்யான அரசு” (false state) என வருணித்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரித்தானியா, ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகள் புதிய நாட்டை அங்கீகரித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் ஸ்பெயின், கிறீஸ், உரோமனேயா, சைப்ரஸ், ஸ்லோவேனியா, சைப்ரஸ் நீங்கலாக ஏனைய நாடுகள் கொசோவோவை அங்கீகரித்துள்ளன.

கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்ததின் மூலம் அமெரிக்கா ஒரு வல்லரசுக்கு உரிய தனது அரசியல் மற்றும் படை பலத்தை எண்பி;த்துள்ளது. உலகில் இன்று அமெரிக்கா வைத்ததுதான் சட்டம். அதை யாரும் இலேசில் மீறிவிட முடியாது.

இன்று கொசோவோவின் தலைமை அமைச்சராக இருப்பவர் முன்னாள் கொசோவோ விடுதலைப் படையின் (Kosovo Liberation Army) தளபதி. கொசோவோ விடுதலைப் படை தொடக்கத்தில் அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தப்பட்ட இயக்கம். ஹாஷிம் தாசி பயங்கரவாதி எனத் தேடப்பட்டவர். ஆனால் 1997 இல் அமெரிக்கா கொசோவோ விடுதலைப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

அமெரிக்கா ஒரு விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என அழைக்கும். பிறிதொரு காலத்தில் அதனை விடுதலை இயக்கம் என அழைக்கும். எல்லாம் அந்த நாட்டின் அரசியல் -புவியியல் நலன்களைப் பொறுத்தது. பயங்கரவாதி யார், விடுதலைப் போராளி யார் என்பதையும் அமெரிக்காதான் தீர்மானிக்கிறது. ஏன் அய்க்கிய நாடுகள் அவைகூட அமெரிக்காவிற்கு அடக்கம் என்பதை ஈராக் மீது ஒருதலைப் பட்சமாக – அய்க்கிய நாடுகள் அவையின் அனுமதியின்றி - படையெடுத்த போது காண முடிந்தது.

உலகில் எத்தனையோ நாடுகளில் எண்ணிக்கையில் குறைவான தேசிய இனங்கள் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராகப் போராடுகின்றன. இருந்தும் ஒரு முஸ்லிம் நாடான கொசோவோ மீது அமெரிக்காவிற்கு மட்டும் ஏன் இந்த அதீத அக்கறை? சோழியன் குடுமி சும்மாவா ஆடியது?

கொசோவோ அல்பேனிய முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டத்தைப் பயன்படுத்தி அல் கொய்தா சக்திகள் அய்ரோப்பாவில் நுழைந்துவிடக் கூடாது என்பது ஒரு காரணம். மற்றது அய்ரோப்பாவில் அமெரிக்கா தனது இரண்டு காலையும் சிக்காராக ஊன்ற ஒரு வாய்ப்பு.

அய்க்கிய நாடுகளின் 1999 ஆம் ஆண்டு எண் 1,244 தீர்மானத்தின் படி கொசோவோ சேர்பிய நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட அய்க்கிய நாடுகளின் பாதுகாப்பில் உள்ள நாடு. ஆனால் அதனை மீறி அமெரிக்காவின் ஆதரவோடு கொசோவோ தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்துள்ளது. அதனை அய்க்கிய நாடுகள் அவை கண்டுகொள்ளவில்லை.

சேர்பியாவின் ஒரே நட்பு நாடான உருசியா கூட கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்துக்கு எதிராக அறிக்கை விட்டு விட்டு அடங்கிப் போய்விட்டது. ஸ்டாலின் காலத்து உருசியா என்றால் கதை வேறு. இன்றுள்ள உருசியா வல்லரசு என்ற பட்டத்தை இழந்துவிட்ட நாடு. எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர அமெரிக்காவோடு மோத முடியாது.

கொசோவோவின் ஒரு தலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கும் நாடுகளைப் பார்த்தால் அவை ஒவ்வொன்றுக்கும் முதுகில் புண் இருக்கும் உண்மை புலப்படும். உருசியா, ஸ்பெயின், இந்தியா, சீனா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் சுதந்திரம் கேட்டு சிறுபான்மை தேசிய இனங்கள் போராடி வருகின்றன. அந்த நாடுகளுக்கு முதுகில் புண் இருப்பதால் கொசோவோவை அங்கீகரிக்க மறுக்கின்றன.

திபெத் நாடு அகிம்சை வழியில் சீனாவின் மேலாண்மை மற்றும் அடக்குமுறைக்கு எதிராகக் கடந்த 58 ஆண்டுகளாக தலாய் லாமா தலைமையில் போராடி வருகிறது. . சீனாவின் அடக்கு முறைக்கு ஒரு இலக்கம் மக்கள் பலியாகியுள்ளார்கள். திபெத் மக்களது நாகரிகம், பண்பாடு, மொழி சிதைக்கப்பட்டுள்ளன. ஆனால் தலாய் லாமாவுக்கு அமெரிக்கா மாலை மரியாதை செய்கிறதேயொழியத் திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்டுக் கொடுப்பது பற்றிப் பேச்சே இல்லை. என்ன காரணம்? திபேத்தை விடுவிப்பதில் அமெரிக்காவிற்கு எந்தப் அரசியல் - புவியியல் நன்மையும் இல்லை. மற்றது சீனாவும் இன்று ஒரு உலக சண்டியன் என்ற இடத்தில் இருக்கிறது. அந்த நாட்டோடு மோத அமெரிக்கா அணியமாய் இல்லை.

கொசோவோவின் ஒரு தலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்து முதலில் அறிக்கைவிட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்று.
ஸ்ரீலங்கா தமிழ்மக்களுக்கு எதிரான படையெடுப்பை நியாயப்படுத்த - இனப் படுகொலையை நியாயப்படுத்த - தனக்குள்ள இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காரணம் காட்டுகிறது. அதாவது ஒரு சுதந்திர நாட்டுக்கு தனது இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற எதையும் செய்ய உரிமை இருப்பதாக வாதாடுகிறது.

ஆனால் இந்தக் கோட்பாட்டை சேர்பியாவைப் பொறுத்தளவில் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. சேர்பியாவின் ஒரு பகுதியை அய்க்கிய நாடுகளது தீர்மானத்தை மீறி கொசோவோ மக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டது.

கொசோவோ மக்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்த அமெரிக்கா – அந்த நாட்டின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய கொசோவோ விடுதலைப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து எடுத்த அமெரிக்கா – அந்தப் படையின் தளபதியாக இருந்தவரை பயங்கரவாதி என முத்திரை குத்தியதை நீக்கிய அமெரிக்கா – தமிழீழத்தையும் பிரித்துக் கொடுக்க முன்வரலாம்தானே? எனப் பலர் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் நீதி, நியாயத்துக்கு .இடமில்லை. ஆயுத பலம் இருக்கிறதா? ஆள், ஆயுத பலம் உள்ள நாடு வைத்ததுதான் இன்று சட்டம்! வல்லான் வெட்டியதே வாய்க்கால்!

சேர்பியா – கொசோவோ ஒரு புறம். மறுபுறம் ஸ்ரீலங்கா - தமிழீழம். இவை இரண்டுக்கும் இடையில் நிறைய ஒற்றுமை உண்டு.


மேற் கூறப்பட்ட ஒற்றுமைகளைவிட ஒரு பலத்த வேறுபாடு கொசோவோ தமிழீழம் இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. கொசோவோ அய்ரோப்பாவின் கொல்லைப் புறத்தில் இருக்கிறது. ஸ்ரீலங்கா தெற்காசியாவில் இருக்கிறது.

தெற்காசியாவின் பிரதேச வல்லரசு இந்தியா என்பது அமெரிக்கா உட்பட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக் கோட்பாடு.

ஒரு நாடு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்றால் அந்த நாட்டுக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சு கூறுகிறது.

“India’s Ministry of External Affairs has issued a statement noting that as Kosovo does not meet all three conditions for recognition, namely “a defined territory, a duly constituted government in charge which is accepted by the people and which has effective control over an area of governance,” India is not offering recognition and would prefer the issue to be “resolved through peaceful means and through consultation and dialogue.”

“கொசோவோ அங்கீகாரத்துக்கு வேண்டிய மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்யத் தவறியுள்ளது. அதாவது “வரையறை செய்யப்பட்ட நிலப்பரப்பு, அந்த நிலப்பரப்பின் மீது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசின் ஆட்சி, ஆட்சி செய்யப்படும் நிலப்பரப்பின் மீது செயற்திறனுள்ள (அதிகார) கட்டுப்பாடு” ஆகியன. எனவே இந்தியா அங்கீகாரம் அளிக்க முன்வராது. அதே நேரம் இந்தச் சிக்கல் அமைதி வழியில் எல்லோரும் கலந்து பேசி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறது.
எனவே கொசோவோ சுதந்திரத்துக்கு இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை தமிழீழம் நிறைவேறினால் இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடும்.

போராட்டக் களத்தில் வெற்றி ஈட்டுவதன் மூலமே இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை நிறைவு செய்யலாம்.

It is useful to remember the axiom of statehood that “war is what dictates borders and winners get the right to draw the new lines.”

அரசுரிமைக்கு ஒரு வெளிப்படையான சித்தாந்தம் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்வது பயனுடையது. “போரே ஒரு நாட்டின் எல்லைகளை நிருணயிக்கிறது. போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளை வரையும் உரிமையைப் பெறுகிறார்கள்!”